பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள்

௨௩௩

“சரியான திராவிடனுடைய மூக்கின் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விழுக்காட்டளவு (proportion), நீக்கி ரோவின் மூக்கிற்குள்ளது போன்றேயிருக்கிறது.”

“இந்தியாவிற்கு வெளியே திராவிட வரணமில்லை.”

“திராவிடரின் முகம் (தலை) வழக்கமாக வாலவடிவாயுளது. ஆனால், பிற இயல்புகளிலெல்லாம் அது ஆரியத்திற்கு நேர்மாறாயுள்ளது” என்று கிரையர்சன் வரைகின்றார்.

தமிழருள் அல்லது திராவிடருள் தாழ்த்தப்பட்டோரான ஒரு பகுதியாரை, ஆதிதிராவிடர் என்று பிரிப்பது தவறாகும். வெயிலில் உழைப்பதாலும், நாகரிக வாழ்க்கையும் சிறந்தவுணவும் இல்லாமை யாலுமே, அவர் அங்ஙனமிருக்கின்றனர். தாழ்த்தப்பட்டோருன் இரண்டு மூன்று தலைமுறையாய் நாகரிகமானவர் மேலோரைப் போலிருத்தலையும், பிறந்தவுடன் ஒரு பறைக் குழந்தையைப் பார்ப்பனக்குடியிலும், ஒரு பார்ப்பனக் குழந்தையைப் பறைக் குடியிலும் விட்டு வளர்க்க உருவம் மாறுபடுவதையும் நோக்குக,


4. பண்டைத் தமிழர் மலையாள நாட்டிற் கிழக்கு வழியாய்ப் புகுந்தமை

மலையாள நாடு பண்டை முத்தமிழ் நாடுகளுள் ஒன்றான சேர நாடாகும். கி. பி. 2ஆம் நூற்றாண்டில், இந்தியா முழுவதையும் தன்னடிப்படுத்திய சேரன் செங்குட்டுவன்கீழ், அது தலை சிறந்த தமிழ் நாடயிருந்தது. ஆனால், இன்றோ முற்றிலும் ஆரியமயமாய்க் கிடக்கின்றது. இதுபோதுள்ள தமிழ்ப் பாவியங்களுள் சிறந்த சிலப்பதிகாரம் மலையாள நாட்டிற் பிறந்த தென்பதை நினைக்கும்போது, சரித்திரம் அறிந்தவர்க்கும் ஒரு மருட்கை தோன்றாமற்போகாது: கி.பி. 9 ஆம் நூற்றாண்டுவரை அது தமிழ் நாடாகவே யிருந்தமை, சேரமான் பெருமாள், சுந்தரமூர்த்தி என்னும் இரு நாயன்மார் சரித்திரத்தாலும் அறியக்கிடக்கின்றது அதற்குப் பின்னும் சில நூற்றாண்டுகள் தமிழ் நாடாகவே யிருந்திருக்கவேண்டும். 12ஆம் நாற்றாண்டிற்குப்பின் தான் மலையாளம் என்னும் மொழி முளைக்கத் தொடங்கிற்று. அது தன் முற்பருவத்தில் தமிழையே தழுவியிருந்தது. பிற்பருவத்தில்தான் ஆரியத்தைத் தழுவிற்று. துஞ்சத்து எழுத்தச்சன் (17ஆம் நூற்றாண்டு) ஆரியவெழுத்தையமைத்தும், வடசொற்களைப் புகுத்தியும், சேரநாட்டுக் கொடுந்தமிழாயிருந்ததை முற்றும் ஆரிய மயமாக்கிவிட்டார். மலையாளம் இன்றும் ஐந்தாறாட்டைப