பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௨௪

ஒப்பியன் மொழி நூல்

பருவத்ததே. ஆயினும் தமிழறியாமையாலும், ஆரியப் பழைமையை நம்பியும் தங்கள் தாட்டைப் பரசுராம க்ஷேத்ரம். என்றும், மிகப் பழைமையானதென்றும், தமிழ்நாடன்றென்றும் சொல்லிக்கொள்கின்றனர் மலையாளத்தார். இது அவர்கட்கு இழிவேயன்றி உயர்வன்று. ஆயினும் இது அவர்கட்குத் தோன்றுவதில்லை.

மலையாள மொழித்தோற்ற வளர்ச்சிகளை S. ஸ்ரீநிவாச ஐயங்கார் அவர்கள் எழுதிய தமிழிலக்கிய ஆராய்ச்சி (Studies in Tamil Literature) என்னும் நூலிற் கண்டுகொள்க. அவை இம் மடலத்தின் இரண்டாம் பாகத்தில் விளக்கப்படும்.

மலையாளம் என்னும் மொழிபோன்றே, அதன் பெயரும் பிற்காலத்தது.

மலை+ஆளி= மலையாளி: ஆளி = ஆள், ஓ. நோ. கூட்டாளி, வங்காளி, பங்காளி, தொழிலாளி. மலையாளி = மலை நாட்டான்.

மலையாளியின் மொழி மலையாளம். மலையாளி+அம்= மலையாளம் , ஓ. நோ, வங்காளி--வங்காளம்.

மலையாள நாட்டின் வடபாகம் மலபார் (Malabar) என்று அழைக்கப்படுகிறது. முதன்முதல் மலையாள நாட்டில் வந்திறங் கின மேலை விடையூழியர், மலையாள நாட்டு மொழிக்கு மலபார் என்று பெயரிட்டு, தமிழையும் அப்பெயரால் அழைத் தனர். அன்றவ்விரண்டிற்கும் வேறுபாடு சிறிதேயாதலின்,

மலை வாரம்—மலவாரம்—மலவார்—மலபார்.

வாரம் — சாய்வு அல்லது சரிவு, ஓ. நோ, அடிவாரம் தாழ்வாரம். வாரம் இடப்பெயராதலை நக்கவாரம் என்பதாற் காண்க. நக்கவாரம்-Nicobar. மலைவாரம்--Malabar.

இப்போதுள்ள மலையாள மக்களின் முன்னோரான தமிழர், மலையாள நாட்டிற் புகுந்தது கிழக்கு வழியாயென்பதற்குச் சான்றுகள் :

(1) பாண்டியனின் தம்பிமாரான சோழ சேரர் தெற்கினின்றும் வடக்கே வந்து, சோழ சேர நாடுகளை நிறுவினர் என்னும் வழக்கு