பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள்

௨௩௭

லும் இவ்வியல்பு இருந்ததாகத் தெரிகின்றது. ஊர் நகர் என்னும் பெயர்கள் முதலாவது வீட்டின் பெயர்களாயிருத்தமையும், பெயர்வுப் பொருளுடையனவாயிருத்தலையும் பிறை வட்டமான எரிமலைத் தொடரிருத்திருத்தல்வேண்டும். அதுவே சக்கரவாள கிரியென்றும், அதற்கப்பாற்பட்ட கடலே பெரும்புறக்கடலென்றுங் கூறப்பட்டிருத்தல் வேண்டும். நெட்டிடையிட்டு நிகழ்ந்த பல எரிமலைக்கொதிப்பும் வெள்ளமும்பற்றியே, ஊவழியித்தியில் நெருப்பால் அழிவு நேருமென்று மலைவாணராகிய சிவனை வணங்குவோரும், நீரால் அழிவு நேருமென்று கடல்வாணராகப் பிற்காலத்திற் கூறப்பட்ட திருமாலை வணங்குவோரும், முறையே கொண்டிருத்தல் வேண்டும்.

5. பண்டைத்தமிழ் நூற்களிற் பிறநாட்டுப் பொருள்கள் கூறப்படாமை

பழந்தமிழ் நூல்களில், தமிழர் வடக்கிருந்து வந்தார் என்பதற்கு சான்றாகத்தக்க, ஒருவகை அயல்நாட்டுப்பொருளும் கூறப்படவில்லை.

‘வெம்மை’ யென்னுஞ் சொல்லுக்கு விருப்பப்பொருளிருப்பது ஒரு சிறிது சான்றாகத் தோன்றலாம். குளிர் நாடுகளில் வெப்பத்தையும் வெப்ப நாடுகளில் குளிர்ச்சியையும் விரும்புவது இயல்பு. அதனாலேயே, ‘a warm welcome’, to pour cold water', 'பாட்டுக் குளிர்ச்சியாயிருந்தது' ' சூடான சொல்' முதலிய வழக்குக்கள் முறையே நற்பொருளும் தீப் பொருளும் பற்றித் தோன்றியுள்ளன. ஆனால், ஆராய்ந்து பார்ப்பின், தமிழ்நாட்டில் வெம்மையும் சில காலங்களில் வேண்டப்படுவது, தெரியவரும். பனிக்காலங்களில் வெம்மையை வேண்டுவதையும், பொதுவாய் மழையையும் குளிரையும் தாங்க முடியாமையையும், 'கொன்வரல் வாடை', 'பலநாளைப் பாலத்தை (வெயிலை)த் தாங்குகிறோம், ஒரு நானைப் புண்ணியத்தை (மழையை)த் தாங்க முடியவில்லையே' என்னும் வழக்குகளையும், இங்கிலாந்திலும் 'a warm reception' என்பது தீப்பொருளில் வழங்குவதையும் நோக்குக.

"வெம்மை வேண்டல்" என்பது தொல்காப்பியம் (உரி, 38. )