பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௩௮

ஒப்பியன் மொழி நூல்

III. தமிழ்மொழித் தோற்றம்

(1) கத்தொலிகள்.Cries.

கா ; ஓ, கோ , கூ..

இவை துன்பத்திற் கத்தும் அரற்றொலிகள், அல்லது பிறரைக் கூப்பிடும் வினிப்பொலிகள்.

ஒ—ஒசை, ஓதை ; ஓல்—ஓலம்,

ஓதை—ஓது. ஒல்—-ஒல் - ஒலி.

கூ—கூவு. கூ( க்குரல்) கூப்பு (தொழிற்பெயர்) + இடு - கூப்பிடு.

(2) ஒப்பொலிகள் --Imitatives:

கா: கூ (கூயில்) - குயில். ஒ. நோ, (கூக்கூ ) - குக்கூ (cuckoo) கக்கூ என்பது பிற்காலத்துச் சரிப்பு: மா - மாடு, காகா—காக்கா —காக்கை—காகம்; குர்—குரங்கு .

ஒலிக்குறிப்புக்கள் — Onomatopoeia

கா: பட்(டு) - படு(விழு). தூ-துப்பு:

உரறு (roar). அரற்று (rattle), பினிறு (blare), கரை (cry, crow)முதலிய சொற்களெல்லாம் ஒலிக்குறிப்பே.

உணர்ச்சிவெளிப்பாட்டொலிகள்—Interjections.

ஒளி—பளபள, தகதக, பலார், பளிச்சு (flash)

நிறம்—பச்சு வெள், கரு.

ஊறு—பிசு, குறுகுறு, சுரசுர, மெத்து;

நாற்றம்—கம், கமகம.

விரைவு—சடு(சட்), E, sudden, சடார், திடும், திடீர், பொசுக்கு.

அச்சம்—துண், திடுக்கு, பே.

இரக்கம்—ஆ. ஆஆ—ஆவா—ஆகா

.