பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் மொழித் தோற்றம்

௨௪௫

திரிசொல் : கிளி - கிள்ளை, மயில் - மஞ்ஞை.

மரூஉ : பெயர் - பேர், கிழவர் - கிழார்.

முதன்மெய்நீக்கம் : சமர் - அமர், தழல் - அழல்.

முதன்மெய்ப்பேறு : ஏண் - சேண்.

சிதைவு : எம்மாய் - யாய், நும்மாய் - ஞாய், தம்மாய் - தாய்.

போலி : நாலம் - ஞாலம், நெயவு - நெசவு, குதில் - குதிர்.

இலக்கணப்போலி - சிவிறி (எழுத்துமாற்று), வாயில் (சொன் மாற்று), கோயில் (உடம்படுமெய்ம்மாற்று).

முக்குறை:-

முதற்குறை : தாமரை - மரை, ஆட்டுக்குட்டி - குட்டி.

இடைக்குறை : வட்டை - வடை, உருண்டை - உண்டை.

கடைக்குறை : தம்பின் - தம்பி, கோன் - கோ.

அறுதிரிபு (உலக வழக்கு)

வலித்தல் : கொம்பு - கொப்பு, ஒளிர் - ஒளிறு, பதர் - பதடி.

மெலித்தல் : போக்கு - போங்கு.

நீட்டல் : நடத்து - நடாத்து, கழை - கழாய்.

குறுக்கல் : ஆங்கு - அங்கு.

விரித்தல் : - முதல்விரி : காயம் - ஆகாயம்.

இடைவிரி : காதம் - காவதம்

கடைவிரி : திரும் - திரும்பு

தொகுத்தல் : செய்யுமவன் - செய்வோன்.

குழூஉக்குறி : இருகுரங்குக்கை (முசுமுசுக்கை).

எதுகை : (இயற்கை) செயற்கை (செயல் + கை).

காரணச்சொல் : உள்ளி, நாளி - நாழி (நாளம் = மூங்கில்).

தொழிற்பெயர் : வெட்டு, கேடு, செய்கை.

பண்புப்பெயர் : வெளுமை - வெண்மை.

வினையாலணையும் பெயர் : வெட்டுவான், வாழவந்தான்.

ஆகுபெயர் : இலை (அலகு), வெள்ளை (வெளுத்த துணி)