பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௪௬

ஒப்பியன் மொழி நூல்

திரிபாகுபெயர் : பித்தம்-பைத்தியம்.

குறுமைப்பெயர் : நரிக்கெளிறு, தொட்டி-தொட்டில்,

பருமைப்பெயர் : குன்று- குன்றம், தெருஞ்சில் - ஆனை நெருஞ்சில்,

உடையோன் பெயர் : அறிவுடையோன், வீட்டுக்காரன்,

இல்லோன் பெயர் : அறிவிலி.

தொழிலிபெயர் : வெட்டி, சலிப்பான், கொள்ளி.

அறுதொகை:--

வேற்றுமை : ஊற்றுக்கண், பிழைபொறுத்தான்,

வினை : நிறைகுடம், சுடுசோறு.

பண்பு : வெந்நீர், செம்மறி:

உவமை : கண்ணாடியிலை.

உம்மை : பயிர்பச்சை, தாய் பிள்ளை:

அன்மொழி : நால்வாய்,

இடைச்சொற்றொடர் ; இன்னொன்று.

புணர் மொழித்திரிபு! புகவிடு-புகட்டு, வரவிடு-வரட்டு, 'போகவிடு-போகடு-போடு. L. Pono; Gacl. Put; W. Pwitio ; A. S. potian; E. put, pose.

மரு உப்புணர்ச்சி : தெங்கு -- காய் தேங்காய்,

துணைவிகைப்பேறு எழுந்திரு, கொண்டாடு, பாடுபடு,

முன்னொட்டுச்சேர்பு: முற்படு, உட்கொள்,

பின்னொட்டுச்சேர்பு : பொக்கணம், ஏராளம்:

அடைமுதல் : நல்லபாம்பு, செந்தாமரை, முடக்கொற் நான் -

சினைமுதல் ; வாற்குருவி, கொண்டைக்கடலை,

அடைச்சினை முதல் (வண்ணச் சினைச் சொல்) : செங்கால் நாரை.

ஒட்டுப் பெயர் : இரெட்டியைக் கெடுத்த வெள்ளி, தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன்: