பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்மொழித் தோற்றம்

௨௪௯

மருத நிலத்தரசன் ஏனை நாற்றிணைகளையும் அடிப் படுத்திய போது. ஐந்திணை வழக்கும் ஒரு மொழியாயின : பின்பு அடுத்த நாடுகளைக் கைப்பற்றிய போது, சொல்வளம் விரிந்தது.

விலங்கு பறவை முதலிய ஒவ்வோர் உயிரினத்தினின்றும் சில சொற்களும் வழக்குக்களும் கருத்துக்களும் கோன்றின. அவற்றுள் நிலைத்திணையினின்றும் தோன்றியவை மிகப்பல. அவையாவன :—

முதல் :—

"அறுகுபோல் வேரூன்றி அரசு போலோங்கி அத்திபோல் துளிர்த்து ஆல்போற்படர்ந்து..........." என்று ஒரு வரை வாழ்த்துவது வழக்கம்.

அரசாணிக்கால் நட்டல், அறுகிடல் என்பவை திருமண வழக்கு:

கொடி = குலத்தொடர்ச்சி. கா : கொடி வழி, கொடி கோத்திரம்,

புல் = சிறுமை. கா , புன்மை , புல்லியர், புன்செய், புன் செயல், புன்னகை,

பனை = பெருமை, ஓரளவு.

மரம் - மரபு. அடியுங் கவையுங் சிளையும் உடைய மரம் போலக் கிளைத்துத் தொடர்ந்து வருதலின், குல வழி மரபெனப்பட்டது.

மன்று என்னும் சொல்லும் மரம் என்பதினின்றே வந்திருக்கின்றது. கா = சோலை. காத்தல் பழச்சோலையைப் போற் காத்தல்:

வாழை - வாழ்:

வாழை நீர்வள நிலத்தில் வளர்வதையும், ஒரு குடும்பம் போல மரமும் பக்கக்கன்றுகளுமா யிருப்பதையும், பெற்றோர் தள்ளாடின பின் பிள்ளைகள் தலையெடுப்பது போலத் தாய் வாழை முதிர்ந்த பின் பக்கக் கன்றுகள் ஓங்குவதையும், இங்கனம் தொடர்ந்து நிகழ்வதையும் நோக்குக. "வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம்" என்றார் இராமலிங்க அடிகள்.