பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழிலக்கணத் தோற்றம்

௨௬௧

வா, தா என்பவற்றின் கால்மேல், வேறுவகையாய் வந்த புள்ளியை எழுத்துப்புள்ளியென் றெண்ணி, முதலாவது வர் தர் என்றும், பின்பு வரு தரு என்றும், ஏட்டைப் பார்த்துப் பெயர்த்தெழுதினவர் தவறு செய்ததாகத் தெரிகின்றது. இறந்த காலத்தில் இவ்வினைகள் வந்தான் தநதான் எனக் குறுகி மட்டும் நிற்றல் காண்க.

ந—த, போலி. ஓ. நோ. நுனி-நுதி. ஆன்மா -ஆத்மா (வ).

இடைமைப் பெயர் :

ஊ இடைமைச்சுட்டு, ஊ+ன் = ஊன் (வழக்கற்றது).. ஊ+ம்=ஊம் (வழக்கற்றது).

படர்க்கைப் பெயர் :

படர்க்கைச் சுட்டு. ஆ+ன்= ஆன்— தான், ஆ+ம்= ஆம்—தாம். தாம் +கள் = தாங்கள்.

மூவிடப்பெயர்களும் வேற்றுமைப்படும் போது பின் வருமார திரியும்.

யான் —என், யாம்—எம். யாங்கள்—எங்கள், நான்—(நன்), நாம்—நம், நாங்கள்— தங்கள், நீன்— நின், (நூன்—நுன்—உன், நீம் — (நிம்), (நூம்)— நும்—உம், நீங்கள்—(நிங்கள்). (நூங்கள்)— நுங்கள்—உங்கள், தான்—தன், தாம் தம், தாங்கள்—தங்கள்.

பிறைக்கோட்டுளுள்ளவை இது போது தமிழில் இருவகை வழக்கிலும் வழக்கற்றவை. இவற்றுக்குப் பதிலாக இவற்றை யொத்த பிற சொற்களே வழங்குகின்றன. நன் என்பதற்கு என் என்பதும் நங்கள் என்பதற்கு எங்கள் என்பதும் வழங்குதல் காண்க.

வினாப்பெயர்

ஏ உயரச்சுட்டு , ஏ+ள்—ஏன். ஏ+ம் = ஏம் (தமிழில் வழக்கற்றது).

குறிப்பு :

(1) முதலாவது, ஏ ஈ ஊ ஆ என்ற நெடில்களே, மூவிடப் பெயராகவும், வினாப்பெயராகவும் திணையும் பாலும் காட்டாது இடமும் எண்ணும் மட்டும் காட்டி வழங்கிவந்தன: