உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௬௮

ஒப்பியன் மொழி நூல்

பண்புப்பெயர் (Abstract Noun)

பண்புப்பெயரீறு :

மை = மேகம், 'நீர், நீரைப்போன்ற நல்லதன்மை, தன்மை :

ஒ: நோ. நீர்= தன்மை. நீர் என்பது புனற்பொருளொடு மயக்காமைப் பொருட்டு, நீர்மை என மையீறு பெறும்.

படி+மை = படிமை = போன்ளம = போன்ற தன்மை, தீமை = தீயின் தன்மை, நன்மை=நல்ல தன்மை, புல்+மை= புல்லின் தன்மை, பெருமை=பெரிய தன்மை, தான்=தன். தன்மை = தன்குணம், குணம்: இனிமை= இனிக்குந்தன்மை;

அம் = நீர்.

தல் +அம் = நலம் = நல்லதன்மை . வள்+அம்= வளம்= வளத்தன்மை , சின + அம் = சினம் = சினக்குந்தன்மை.

அப்பு = நீர்: அப்பு—பு

இனி+ அப்பு= இனிப்பு: இன்+பு= இன்பு: இன்லுதல் = இனித்தல். இன்பு+அம் = இன்பம்:

அப்பு என்பதில் அகரம் கெட்டது; ஒ: நோ: மற+ அத்தி = மறத்தி.

திசைப்பெயர் :

திகை — திசை; திகைத்தல் மயங்கல், திகைப்பதற்கிடமானது திகை, திசைத்தல் திகைத்தல்: திக்குவதற்கிடமானது தீக்கு: திக்குதல் தடுமாறல். திக்குமுக்காடுதல் என்னும் வழக்கை நோக்குக. வடநூலார் திஸ் (காட்டு) என்னும் மூலத்தைக் காட்டியது பிற்காலம்.

திசைச்சொல் என்பது ஓர் இலக்சணச்குறீயீடாயிருத்தலை நோக்குக திசை திக்கு என்னும் இருசொல்லும் வடசொல்லாயின், தமிழுக்குத் திசைபற்றிய சொல்லே யில்லை யென்றாகும். இது கூடாமையே, எல்லையென்னுஞ்சொல் முதலாவது சூரியனைக் குறித்து, பின்பு முறையே வேளை, குறித்த வேளை, குறித்த இடம், வரம்பு என்னும் பொருள்-