பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழிலக்கணத் தோற்றம் உகா (1) துணைவினை பெற்றது: கா: செய்தானல்லன் செய்தானில்லை படர்க்கை செய்ததிலன் | ஆன் பால் செய்ததில்லை இறந்தகால செய்திலன் | வினைமுற்று செய்பவில்லை (முக்காலத்திற்கும் பொது ) இங்கனமே பிற பாலிடங்கட்கும் ஓட்டுக. இல்லை யென்னும் சொல் இருதிணையைம்பால் மூவிடங்கட்கும் பொது. (2) இடைதொக்கது. கா: செய்யேன், செய்யாய், செய்யான்'. இது எதிர்கால வினை : வழக்கத்தைக் குறிக்கும்போது முக்காலத்தையும் தழுவும் : இதில் இது நியிலுள்ள உயிர் குறி லாயின் நீளும். செய்யாய் செய்யீர் என்னும் முன்னிலை வினைகள், முறையே, ஒருமை பன்மை ஏவலாகவும் வரும். காலங்காட்டும் இடை நிலையின்மை எதிர் மறை குறிக்கும் என்பர் கால்டுவெல் ஐயர்.* வினையெச்சம் செய்யாது (எதிர்மறைத் தொழிற்பெயர்). செய்யாமை (எதிர்மறைத் தொழிற்பெயர்). செய்யாமை - செய்யாமே. செய்யாமை--செய்யாமல். துவ்வீற்றுப்படர்க்கை ஒன்றன்பாற் பெயர் வினை யெச்ச மாகக் கூடியதை, பெரிது வந்தான், நன்று சொன்னான் என்னுந் தொடர்களா லுணர்க. முற்றெச்சம் = பனை பாலணையும் பெயர் +ஆய், ஆன. செய்யாது என்னும் வாய்பாட்டில் வரும் அல்லாது இல்லாது என்னும் குறிப்புவினைகள், அல்லது (அல் + அது), அன்று (அல்+தி), இல்லது (இல்+அது) இன்று (இல் +5) எனக் குறுகும். அன்று போனான் - அல்லாது போனான்: இன்று போனான் இல்லாது போனான், - c.c. G. p. 361.