பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________ ஒப்பியன் மொழி நூல்


இடைச்சொல்

இடை ஒன்றன் இடம். இடு(கு)தல் சிறுத்தல், உடம்பில் இடுகிய பாகம் இடை. இடைாேல ஒன்றன் பாகமான இடம் இடை. ஒ. நோ. கண், கால், தலை, வாய், இடம் என்பது உண்மையான இடத்தையும் இடை என்பது 7ஆம் வேற்றுமை இடத்தையுங் குறிக்கும்.

பெரும்பாலும் பெயரிடத்தும் வினையிடத்தும் வருஞ் சொல் இடைச் சொல்,

இடைச்சொற்கள், பொருள் இடம் பயம் பாடு குன்றிய பொருண்மை என்பனபற்றி, நால்வகையாக வகுக்கப்படும்.

(1) பொருள்கள் குறிப்பு, வினா, ஐயம், உயர்வு, இழிவு, எச்சம், விளி, வியப்பு, காலம், இடம், பிரிநிலை, தேற்றம், முற்று, எண், பயனின்மை , பிறிது முதலியன. '
(2) இடம் பற்றியவை முன்னொட்டும் பின்னொட்டும்.
(3) பயம் பாடு பற்றியவை வேற்றுமையுருபு, உவமவுருபு; பெயரீறு, வினையிறு, சாரியை, இனக்கச்சொல், இணைப்புச் சொல், வரிசைக்குறி என்பன.

இடைச்சொல் பெரும்பாலும் பயம் பாட்டைப் பொறுத்தது.

கா : போன்றான் (வி.), போல (இ); என் றான் (வி), என்று (இ.).

(4) குன்றிய பொருள சிவசிவா (சூசுவா). பார்த்தாயா பார் முதலியன. இணக்கச்சொல் ஆம், சரி, தல்லது, ஆகட்டும் முதலியன: இணைப்புச் சொல் நால்வகைய. அவையாவன :

ii கூட்டிணைப்புச்சொல் (Cumulative Conjuncion). கா : ஏ, உம், என, அதோடு, அன்றியும், மேலும், இனி. ii. விலக்கிணைப்புச்சொல் (Alternative Conjuuction) கா ! ஆயின், ஆனால், ஆனாலும், என்றாலும், இருந்

தாலும்.