பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்சுலைக்கழக அகராதிக் குறைகள்

௩௦௭


வினை. ஈதல் கொடுத்தல் ஏன்றீயேன் (என்றிட்டேன்) - என்றியேன் - என்றிசேன் - என்றிசின்.

குரை: குரு + அ = குர -குரை-பெருமை. ஒ. நோ.குரு+ அவு = குரவு. குரவு+ அன் - குரவன் - பெரியோன் பல்குரைத்துன்பம்", பெறலருங் குரைத்தே."

ஓரும்: ஓர்=உணர்,ஒன்று "அஞ்சுவதோரும் அவா = அஞ்சுவதொன்றும் அவாவே ; (அல்லது) அஞ்சு வது அவா, அதை நீர் உணரும். அதனோரற்றே அதனொடு ஒரு தன்மைத்து. அன்றே = அவ்லவோ போலும் இருந்து முதலிய பிறசொற்கள் வெளிப் படை:

சில இடைச்சொற்கள் வீண் வழக்கால் பொருளிழந் துள்ளன. கா : ஊரிலே - ஏ ; மரத்தினின்றும்-உம்.

உரிச்சொல்

உரிச்சொல் முன்னர்க் கூறப்பட்டது. உடம் - (உட) - (உடி) உரி. உரிமை - உடமை. உடல்-உடன். ஒ.நோ. தொலி -தோல் -தோறு தோடு - தொலி . தொறு = கூட உரி= தோல். உடு, உடீஅ என்பவற்றை நோக்குக


பல்கலைக்கழக் அகராதியின் பல்வகைக் குறைகள்

ஒரு வழங்கு மொழியின் சொற்கள் இயல்பாக நூல் வழக்கில் ஒரு தொகுதியும் உலக வழக்கில் ஒரு தொகுதியுமாக இரு கூற்றாகவேயிருக்கும். வடமொழி போன்ற வழக்கற்ற மொழியாயின், எல்லாச் சொற்களையும் நூல்வழக்கினின்றே அறிய முடியும். தமிழ் போன்ற வழங்கு மொழியாயின், எல்லாச் சொற்களையும் தொகுக்க வேண்டுவார் இருவகை வழக்குகளையும் ஆராய்ந்தாக வேண்டும்.

தமிழ்நாட்டில், இதுபோது தமிழில் தலைமை தாங்குபவர் பெரும்பாலும் பார்ப்பனர். அவர் நாட்டுப்புறத்தாரோடும் தாழ்த்தப்பட்டாரோடும் அளவளாவு நிலையினரல்லர். தமிழ்