பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்கலைக்கழக அகராதிக் குறைகள்

௩௦௯

(5) பல தென்சொற்களை வடசொற்களாகவும் பிறசொற்களாகவும் காட்டியிருத்தல்.

தமிழ் நாட்டின் பெரும்பகுதியைக் கடல் கொண்டதினாலும், பல தமிழ்க் கலைகளும் நூல்களும் அழிந்து போனதினாலும், பண்டைத் தமிழின் பல சொற்கள் மறைந்து போனமையால், இதுபோது எல்லாத் தமிழ்ச் சொற்கட்கும் வேர் காட்ட முடியாததுண்மையே. ஆயினும், சொல்லியல் நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பின், பல சொற்கட்கு வேர் காட்டல் கூடும். இப்போதே இஃதாயின், தொல்காப்பியர் காலத்தில் எத்துணை எளிதாயிருந்திருக்கும்? ஆயினும், வேர் காண்டல் எல்லார்க்கும் எளிதன்று. இதனாலேயே,

மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா (உச். 98)

என்றார் தொல்காப்பியர்.

'விழிப்ப' என்பது விழித்தமட்டில் அல்லது பார்த்தமட்டில் என்று பொருள்படும். 'விழிப்பத் தோன்றா' என்பதற்கு "beyond ascertainment" என்று, பல்கலைக்கழக அகராதிப் பதிப்பாசிரியராகிய உயர் திருவையாபுரிப் பிள்ளையவர்கள் கூறியிருப்பது தவறாகும்.

பல்கலைக்கழக அகராதியில், தென்சொற்கள் வடசொற்களாய்க் காட்டப்பட்டிருப்பதற்கு, இரு காட்டுத் தருகின்றேன்,

(i) மயில்,மயூர (வ.)

மை = கருப்பு: மயில் = கரியது. பச்சையானது. கருமை நீலம் பச்சையென்பன இருவலை வழக்கிலும் ஒன்றாகக் கூறப் படுவதுண்டு, பச்சை மயில் நீலக்கலாபம் என்னும் வழக்குகளை நோக்குக, காளி, நீலி என்பர் கொற்றவையின் பெயர்கள் - திருமாலின் நிறம் கருமை நீலம் பசுமை எF முத்திறத்திற் கூறப்படும். நீலச்சேலைக் கருப்புச் சேலை யென்பது உலக வழக்கு சற்றுப் பசிய வெண்ணிறக் காளையை மயிலை என்பர் உழவர். மயில் தென்னாட்டிற்குச் சிறப்பாயுரிய குறிஞ்சிப் பறவையாகும். மயில் என்னும் தமிழ்ச் சொல்லே மயூர என்று வடசொல்லில் வழங்குகின்றதென்க,

(ii) வடவை வடவா (வ.)

வடதுருவத்தில் சில சமையங்களில் தோன்றும் ஒளி வடவை யெனப்பட்டது. வடக்கிலிருந்து வரும் காற்றும்