பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

I 50 ஒப்பியன் மொழி நூல்


வடவை வடந்தை எனப்படும், வடவை ஒளி அல்லது தீ ஆங்கிலத்தில் Aurora Borealis என்றழைக்கப்படும்.

Aurora Borealis, the northern aurora or light; L. aurora, light; borealis, northerg - boreas, the north wind.

கிரேக்கர் வடகோடியில் வாழ்ந்த ஒரு வகுப்பாரை Hyperboreans என்றழைத்தனரென்றும், அப்பெயர் மலைக்கப்பாலர் என்று பொருள்படுமென்றும், Boreas என்பது வடகாற்றின் பெயரென்றும், அது முதலாவது மலைக்காற்று என்றே பொருள் பட்டதென்றும், Boros என்பதின் பொருள் மலையென்றும், மாக்ஸ் முல்லர் எழுதிய 'மொழி நூற் கட்டுரைகள்' என்னும் நூலின் இரண்டாம் பாகத்தில், 8 ஆம் 9 ஆம் பக்க அடிக்குறிப்பில் குறிக்கப்பட்டுள்ளது.

இதனால் boros அல்லது boress என்பது பொறை என்னும் தமிழ்ச்சொல்லே யென்றும், Hyperboacan என்பது உப்பர்ப் பொறையன் என்றலமயும் தமிழ்த்தொடர் என்றும் தெரிகின்றது. |

வடவை வடமுகத்தில் தோன்றுவ தால் வடவை முகம் என்றுங் கூறப்படும். ஒ. நோ. துறைமுகம்,

ஆல்ப்ரெட் ரசல் உவாலேஸ் என்பவர், மலேயத்தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த முக்க {Muka)த் தீவில், தாம் வடவைத் தீயைக் கண்டதாகக் கூறுவதால்* தமிழர் வடவைத்தீயைக் கண்டிருந்தார் என்பதில் எட்டுணையம் ஐயத்திற்கிடமின்று.

வடவை என்னும் தமிழ்ச்சொல்லைப் படபா என்றும். வடவைமுகம் என்பதைப் படபா முகம் என்றும் வடமொழியில் திரித்துக் கொண்டு, பெட்டைக் குதிரையின் வடிவானது என்று அதற்குப் பழைமையர் கூறிய பொருளை இவ்விருபதாம் நூற்றாண்டிலும் கூறினால், மேனாட்டுக்கலை இந்நாவலந் தேயத்திற்கு வந்து என்னதான் பயன்?

ஒரு மொழியின் பெருமையை உணர்த்தும் நூல்களில் அகராதியும் ஒன்றாகும். தமிழகராதி இங்கன மிருப்பின், அம் மொழியின் பெருமை எங்ஙனம் புலனாகும்? அசுராதிக்கு வராது எத்துணையோ சொற்கள் நாட்டுப்புறங்களில் வழங்குகின்றன.


  • The Malay Archipelago, p. 402.