பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பியன் மொழி நூல்


(9) தென்ஞாலத்தின் வளமை:

உலகத் திற் கிடைக்கும் பொன்னும், வயிரமும், பெரும்பாலும் தென்னாப்பிரிக்கா, தென்னிந்தியா, தென்கண்டம் (Australia) ஆகிய இடங்களிலேயே எடுக்கப்படுகின்றன,

(10) முதல் மாந்தன் வாழக்கூடிய கனிமரக்கா (ஏதேன்) தென்ஞாலக் குறிஞ்சி நாடுகளிலேயே காணக்கூடியதா யிருத்தல்:

குறிப்பு :-கிறித்தவ விடையூழியர் கானான் நாட்டை ஞாலத்தின் மையம் என்று கூறுவது தவறாகும். அந்நாடு நள்ளிகை (Equator)க்கு வடக்கே 30 ஆம் 40 ஆம் பாகைகட் கிடையிலுள்ளது. குமரிநாட்டிடமோ நள்ளிகையின் மேலேயோ உள்ளது. மேலும், பண்டை ஞாலத்தில் தென்பாகத்திலேயே நிலம் மிக்கிருந்ததென்றும், கானான் நாட்டு நிலம் நீர்க்கீழ் இருந்ததென்றும் அறிய வேண்டும்.

ஆதியாகமத்தில் மாந்தன் படைப்பை யூத சரித்திரத் தோடு இணைத்துக் கூறியிருக்கிறது.

யூதர் முதல் மக்கள் வகுப்பாரல்லர் என்பதற்குக் காரணங்கள் :

(i) பழைய ஏற்பாட்டில் 4000 ஆண்டுச் சரிதையே கூறப்பட்டுள்ளமை.
இதுபோது 6000 ஆண்டுகட்கு மேற்பட்ட மரங்கள் உள்ளன வாகச் சொல்லப்படுகிறது: தமிழ்மொழி தோன்றிய காலம் எவ்வகையினும் கி. மு. 5000 ஆண்டுகட்குப் பிற்படாது,
(ii) காயீன் தன்னைப் பலர் கல்லெறிவார் என்று கூறி யிருத்தல் |
(iii) மக்கள் கிழக்கிலிருந்து வந்தாரென்று யூத சரித்திரங் கூறல்.
(iv) யூதர் தேவ புத்திரரைக் கண்டாரெனல்:

தேவ புத்திரரென்று உலகில் சொல்லத்தக்கவர் வெள்ளையரான ஆரியர்: ஆரியரைத் தேவரென்று சொல்லத்தக்கவர் தென்னாட்டிலிருந்து சென்ற கருப்பரா யிருந்திருத்தல் வேண்டும்.