பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூச ஒப்பியன் மொழி நூல்



(4) தமிழில் இடுகுறிச்சொல்லும் சுட்டசை (Definite. * Article) யும் இல்லாமைy
(5) தமிழில் ஓட்டுச்சொற்கள் சிலவாயிருத்தல்.
(6) அம்மை அப்பன் என்னும் தமிழ் முறைப்
பெயர்கள் பல வடிவில் உலகமொழிகள் பலவற்றில் வழங்கல்,
(7) தமிழ்ச்சொற்கள் சிலவோ பலவோ உலக:
மொழிகள் எல்லாவற்றிலுமிருத்தல்.
(8) மும்மொழிக் குலங்களின் சிறப்பியல்பும் ஒரு சிறிது தமிழிற் காணப்படல்:

வடமொழிக்குரிய நீட்டற்புணர்ச்சி (தீர்க்கசந்தி) தமிழிலுள்ளமை முன்னர்க் கூறப்பட்டது.

சித்தியக் குலத்திற்குச் சிறந்த உயிரொப்புத் திரிபு (Harmonious Sequence of Vowels) பொதியில் (பொது + இல் சிறியிலை (சிறு + இலை) முதலிய தொடர் மொழிகளில் உளது.

சீனத்தில் ஒரே சொல் இடவேற்றுமையால் வெவ்வேறு சொல் வகையாகும். தமிழிலும் இஃதுண்டு.

கா : பொன் (அழகிது)- பெயர்ச்சொல். (அது)பொன் --வினைச்சொல், பொன் (வளையல்) - பெயரெச்சம், பொன் (விளைந்த களத்தூர்)- வினையெச்சம்.

பிறமொழிகளில் உள்ள ஒருமை இருமை பன்மை என்னும் எண்பாகுபாட்டிற்கு, அவன் அவர் அவர்கள், அல்லது ஒரு சில பல என்னும் வழக்குகள் மூலமாயிருக்கலாம்.

(9) தமிழில் ஒலிக்குறிப்பாயுங் குறிப்பொலியாயுமுள்ளவை பிறமொழிகளில் சொல்லாய் வழங்கல்:

கா : தரதர-- tear, தகதக-தஹ்(வ.), உசு--hush, சளப்பு -saliva, கெக்கக் கெக்க-L. cacbinne, V; E. cachinna-- tion:

(10) அயன் மொழிச்சொற்கள் பலவற்றிற்கு வேர்தமிழிலிருத்தல்: