பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"உலக முதன்மொழிக் கொள்கை


முக்குல மொழிகளிலுமுள்ள சுட்டு வினாச்சொற்களின் - அடிகள் தமிழிலிருப்பது முக்கியமாகக் கவனிக்கத்தக்கது.

(11) எழுகிழமைப் பெயர்களும் பன்னீரோரைப் பெயர்களும், ஆரிய மொழிகளில் தமிழ்ச்சொற்களின்மொழி பெயர்ப்பாயிருத்தல்.

பண்டைத்தமிழர் வானூல் வல்லோராயிருந்தமை முன்னர்க் கூறப்பட்டது. அவர் நாளின் (நாண்மீனின்) பெயரால் ஒரு கிழமையளவையும், எழு கோள்களின் பெயர்களால் ஒரு வார அளவையும், மதியின் பெயரால் ஒரு மாத 'வளவையும், சூரியன் பெயரால் ஓர் ஆண்டளவையும் குறித் திருத்தலே, அவரது வானூலறிவிற்குச் சிறந்த சான்றாம். இவ்வளவுகள் முதன் முதற் குமரி நாட்டிலேயே தோன்றியவை)

ஆங்கிலத்தில் உள்ள வார நாட் பெயர்களில், Sunday, Monday, Tuesday, Saturday என்னும் நான்கும் தமிழ்ப் பெயர் களின் மொழிபெயர்ப்பாயிருக்கின்றன:

Tues என்பது Zeus என்பதின் மறுவடிவமாகக் கூறப்படுகிறது. இவை முறையே செவ்வாய் சேயோன் என்னும் பெயர்களைச் சொல்லாலும் பொருளாலும் ஒத்திருக்கின்றன, 'Zeus கிரேக்கப் பெருந்தெய்வம்: கிரேக்கர் தமிழ் நாட்டில் மிகப்பழங்காலத்திலேயே குடியிருந்தனர். அவரை யவனர் என்று தமிழ் நூல்கள் கூறும். யவனம் என்பது கிரேக்க நாட்டின் பெயர்களுள் ஒன்று. பாண்டியனுக்கும் கிரேக்க மன்னருக்கும் கயல்மீன் சின்னமாயிருந்ததும், தமிழருக்கும் கிரேக்கருக்கும் பல பழக்கவழக்கங்கள் பொதுவாயிருந்ததும் இங்குக் கவனிக்கத்தக்கன.

இலத்தீனில் வழங்கிய பன்னீர் ஓரைப் பெயர்களும் : தமிழ்ப் பெயர்களின் மொழிபெயர்ப்பாகவேயிருக்கின்றன?


1. Aries (ram) ij: Taurus (bull}, iii: Gemmini (twins), iv. Cancer (crab), v. Leo (lion), vi, Vergo (virgin), vii. Libra (balance), viii. Scorpio (scorpion), ix: Sagittarius (archer) or bow), x, Capricorn (the goat-horned = shark), xi. Aquarius (water-bearer = pitcher), xii. Pisces (fish).

(12) தமிழில் முதல் வேற்றுமைக் குருபின்மை ;
(13) தமிழ் வேற்றுமை யுருபுகளெல்லாம் பின்னொட்டுச்
சொற்களாயிருத்தல்: