பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௩௨௪

ஒப்பியன் மொழி நூல்

பிற்சேர்பு

முன்னுரை : பக்கம் 21: கோத்ர (வமிசம்) என்னும் சொல் மாட்டுக்கொட்டில் என்றும், துஹித்ரி (மகள்) என்னும் சொல் பால் கறப்பவள் என்றும், பொருள்படுவது. ஆரியர் இந்தியாவிற்கு வந்த போது முல்லை நாகரிகத்தினரே என்பதைக் காட்டும்,

நூல் : பக்கம் க0. மொழி நூலுக்கு ஆங்கிலத்தில் Linguistics, Linguistic Science என்றும் பெயருண்டு.

பக்கம் ௩௪; மொழி நூல் நெறிமுறைகள் : உவு. மொழிநூற்கு மாந்தன் வாயினின்று தோன்றும் ஒவ்வோர் ஒலியும் பயன்படும். உக. ஒரு மொழியின் சொல்வளம் அதைப் பேசுவோரின் தொகைப் பெருமையையும் நாகரிகத்தையும் பொறுத்தது.

பக்கம் கருஉ: வாணி என்னும் சொல் வாய்நீர் என்பதினின்று பிறந்ததாகவும் கொள்ள இடமுண்டு, வாய் நீரை வாணீர் என்பது கொச்சை வழக்கு. ஒ. நோ. குறுதொய்—குறுணை. தண்ணீர் தண்ணி எனப்படுவதுபோல, வாணீர் வாணி எனப்படும். வாய் நீருக்கு மறு பெயர் சொள்ளு என்பது: சொளுசொளு என்று வடிவது சொள்ளு. பேசத் தொடங்கும் பருவத்தில் குழந்தைகட்குச் சொள்ளு வடியும், சொள்ளு மிகுதியாய் வடிந்தால் பேச்சு மிகுதியாகும் என்றொரு கொள்கையுளது. 'சொள்ளுப் பெருத்தால் சொல்லுப் பெருக்கும்' என்பது பழமொழி: சொள்ளு-சொல்லுசொல். வாய்நீர்-வாணீர் - வாணி = நீர், சொல், வாணி---- பாணி:

கொச்சை வழக்கிலிருந்தும் சில சொற்கள் கொள்ளப்படும். கா; கொண்டுவா -(கொண்டா)-கொணா-கொணர், பழம்- பயம்.

வாணி என்பதற்கு வாச் என்று வடமொழி மூலங்காட்டினும், அதற்கும் வாய் என்னும் தமிழ்ச்சொல்லே மூலமாதல் காண்க.

பக்கம் , வரி 8 பரசு (பீராய்) மூஞ்செலி (மூஞ்சூறு.

பக்கம் உக௩, சிவம் என்னும் சொல் ருக்வேதத்திற் சேர்க்கப்பட்டது பிற்காலமாகும். அச்சொற்கு மங்கலம்