பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்சேர்பு கூஉரு


அல்லது நன்மை என்று பொருள் கூறினும், அதுவும் திருமகள் நிறம் சிவப்பு என்னும் கொள்கை பற்றியதே.

பக்கம் உகசு. ஓம் என்னுஞ் சொல் எல்லாவற்றையும் படைக்கும் மூல ஆற்றலைக் குறிப்பதென்ற கொள்ளினும், பாதுகாப்புப் பொருளதென்று கொள்ளினும், தமிழ்ச் சொல்லே யென்பதற்கு எள்ளளவும் தடையில்லை.

ஓ என்பது உயரச் சுட்டு. அது உயரமாய் வளர்தலையும் வளர்த்தலையுங் குறிக்கும். வளர்த்தல் காத்தல். ஓ. நோ: ஏ-எ -எடு, எடுத்தல் = வளர்த்தல். Rear, v. t. (orig.)to raise: to bring up to maturity. [A. S. roeran, to raisn.)

ஓ-ஓம்--ஓம்பு . ஓ. தோ: ஏ-ஏம்-ரம்பு : ஆ - அஅம் - அம்பு-அம்பர், கும்-கும்பு, திரும்-திரும்பு.

ஓம் = காப்பு. ஓம்+படு = ஓம்படு, ஓம்படு + ஐ =ஓம் படை= பாதுகாப்பு, பாதுகாப்புச் செய்தல், ஓம்படுத்துரைத்தலென்பது ஒரு கோவைத்துறையாயுமுள்ளது. ஓம்படுதல் தன் வினை. ஓம்படுத்தல் பிறவினை, வழிப்படுத்துரைத்தல் என்னும் துறைப் பெயரை நோக்குக.

பக்கம் உசக; உதடுகள் உகரத்தை ஒலிக்கும்போது மூன்னும் இசுரத்தை ஒலிக்கும்போது பின்னும் செல்வதால், உகர இகரங்கள் முறையே முன் பின் என்னும் பொருள்களையும் அவற்றை அடிப்படையாகக் கொண்ட பிற கருத்துக்களையும் தரும் சொற்களைப் பிறப்பிக்கும்.

கா: ஊங்கு - முன்பு. உசக ஆம் பக்கத்தில் உயரக் கருத்தை அடிப்படையாக் கொண்டு எதிர்காலத்தையுயர்த்து வதாகக் கூறிய உகரம், முன்மைக் கருத்தை அடிப்படியாகக் கொண்டு அக்காலத்தையுணர்த்துவதாகவுங் கொள்ளலாம். ஊங்கு -ஊக்கு . உகை --L. Gr. ago, to drive, Act, agent, agency, agenda முதலிய சொற்கள் ago என்னும் மூலத்தினின் றும் பிறந்தவை. உத்து-முற்செலுத்து.

துர-E. drive, A; S. drifan, Ger. treiben, to push.

முன்--முந்து மூ--மூக்கு - முகம்-முகப்பு: முகம்நுகம்: மூக்கு-முகடு: மூக்கு-முகை -முகிழ்: மூக்கு-முக்கு:

முகம் என்பது முதலாவது முன்னால் நீண்டிருக்கின்ற மூக்கைக் குறித்து, பின்பு தலையின் முன்புறமான முகத்தைக்