பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்சேர்பு


பின்-பிற- பிறகு- பிறக்கு-E. back, A. S. boec, Sw. bak, Dan, bag.

திரை = எழினி, அலை, தோற்சுருக்கு, தயிர்த்தோயல். இவரத்தல் - இழுத்தல். வேட்டியை மேலே இழுத்துக் கட்டு தலைத் திரைத்துக் கட்டுதல் என்பர் இன்றும் தென்னாட்டார், திரை (எழினி) இழுப்பது. அலை தோற்சுருக்கு முதலியவை ஆடையை இழுத்திழுத்து வைத்தாற்போலிருத்தல் காண்க.

திரை என்னும் சொல்லே ஆங்கிலத்தில் draw என்று திரியும்; Drawer என்பது இழுக்கின்ற மரத்தட்டையும், இழுத்துக் கட்டினாற்போன்ற குறுகிய காற்சட்டையையும் குறித்தல் காண்க. திரை என்பதினின்று பல மேலையாரியச் சொற்கள் பிறக்கும்.

L. traho. Dut, trekken, E. draw. A. S. dragas. Ger. trages, Ice. drug, draft, drafts; drag draggle, dragnet; drain, drainage, draine; draught, draught house; draughts, draughtboard, draughtsman;drawback, drawsbridge, drawee, drawing, Hawing-room, drawl, draw-welf; withdraw, dray : dredge, dredger dregs, dreggy; trace, tracery: track, trackroad; inet, tractatihity, tractile, tractarias, traction. tractor, tractive, abstract, attract, extract; trail; train, trainer, training, trainband, train-bearer; trait; trawl; treachery; treat, treatise treatment, treaty'; tret; trick; trigger; troll ; திராவகி (வ.) முதலிய சொற்களெல்லாம் திரை என்னும் சொல்லை மூலமாக அல்லது நிலைமொழியாகக் கொண்டவையே. திரைத்தல் = இழுத்தல், இறக்குதல்,

பக்கம் உஎச. இகம், இதி என்பவை இகரச்சுட்டடிம் பெயரான தொழிற்பெயரீறுகள்.

பக்கம் உ.அங.. 3-ஆம் வேற்றுமைக்குரிய கருவிப்பொருளும் 7-ஆம் வேற்றுமைக்குரிய இடப்பொருளும் உணர்த்தக்கூடிய' இல் என்னும் உருபு. அப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு நீங்கற் (motion from) கருத்தைச் சிறப்பாகப் பெற்று 5-ஆம் வேற்றுமையாயிற்று:

பக்கம் உ.அசு, ஒப்பியல் தரங்கள் (Degrees of comparison) ஒய்டித்தரம் (postive), உறழ்தரம் (comparative), உயர் தரம் [superlative) என மூவகைப்படும். அவற்றுள் ஒப்புத்தரம் 2-ம் வேற்றுமையுருபுடன் விட (நீக்க), பார்க்க (காண); பார்க்கிலும்,

ஒ. மொ .-26