பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்பியன் மொழிநூல்


(பார்த்தாலும்), காட்டின் (காட்டினால்), காட்டிலும் (காட்டினாலும்) முதலிய சொற்கள் சேர்வதாலுணர்த்தப் படும், பிற வெளிப்படை.

பக்கம் உகசு. நிகழ்கால வினையெச்சம் முதலாவது தொழிற்பெயராயிருந்தது. செய்யல் செய்ய. ஆங்கிலத்திலும் இங்ஙனமே.*

பின்னிணைப்பு !

மா என்னும் வேர்ச்சொல்

மதி (நிலா) என்னும் சொல் மத என்னும் சொல்லடியாய்ப் பிறந்தது. மதமத என்பது உணர்ச்சியின்மையைக் குறிக்கும் ஒரு குறிப்புச்சொல், மத-மதவு மயக்கம், பேதைமை,

"மதவே மடனும் வலியு மாகும்" என்றார் தொல்காப்பியர்

மத - மதம் - மதர் = மயக்கம். மதம் - மத்தம் = மயக்கம், பைத்தியம், நிலவினால் - மயக்கம் உண்டாகும் என்றொரு பண்டைக் கருத்துப்பற்றி, நிலா மதியெனப்பட்டது. மதம்-மதன் = வலி,

ஒ. நோ. சந்திரரோகம் = பைத்தியம். Lunacy (insanity) from luna, the moon; மயக்கம் தருவதினாலேயே, தேனுங் கள்ளும் மதம் என்றும் மது என்றும் கூறப்பட்டன.

மதி காலத்தை யளக்குங் கருவியாதலின், அதன் பெயர் அளத்தற்பொருள் பெற்றது. L. metior Goth, mitan, Ger. messen, A. S. metan, E. mete, Sans. மிதி, மதி-(மது)-மத்துமட்டு,

மதி என்னுஞ் சொல்லே மா என்று மருவியிருக்கலாம்: ஒ. நோ. பகு -பா, மிகு - மி. எங்கனமாயினும், மா என்னும் வேர்ச்சொல் தமிழே என்பதற்குத் தடையில்லை,

மா என்பது ஒரு கீழ்வாயிலக்கம், ஒரு நில அளவு:

மா+அனம் - மானம் அளவு, வருமானம் = வரும்படி,

- • Historical Outlines of English Accidence, p. 258.