பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பின்னிணைப்பு ந உக


மானம் என்னும் சொல் அளவு என்பதை அடிப்படையாகக் கொண்டு பல பொருள்களைப் பிறப்பிக்கும்;

மானம் = 1 படி (வடார்க்காட்டு வழக்கு)

= அளவு, ஒப்பு, கா : சயானம் (இரு.)
= அளவு, மதிப்பு. மானம் - 'honour (L.)
= மதிப்புப்பற்றியனிக்கும் பரிசு, கா : சன்மானம் (இரு.)
= தன்மதிப்பு. உயிர் நீப்பர் மானம் வரின்
=பெருமை, [குறள், 969.)
= அகங்காரம். களிமடி மானி' (நன். 39.)
=அளவு, வரையறை, விலக்கு.

மெய்ந்நிலை மயக்கம் மான மில்லை " (மொழி. 14)

என்பதன் உரையில் நச்சினார்க்கினியர் மானம் என்பதற்குக் குற்றமென்று பொருள் கூறியது குற்றமாகும், டாக்டர் S. P. சாஸ்திரியார் ஆனம் என்று பிரித்தது அதிலும் குற்றமாகும். “கடிநிலை யின்றே” (புள்ளி. 94), வரை நிலை யின்றே (புள்ளி. 104) என்று தொல்காப்பியர் பிறாண்டுக் கூறுவதை, *மானமில்லை என்பதனுடன் ஒப்பு நோக்குக:

= அளவு கருவி;
= அளவு, ஒரு தொழிற் பெயரீற: கா! சேர்மானம்

மானம் (மதிப்பு)X அவமானம். அவி+அம் = அவம் = அழிவு. மானம் என்பது. அளவு அளவை என்னும் பொருளில் வடமொழியில் மாணம் என்று திரியும். கா ! பரிமாணம், பிரமாணம். மானம் என்பதினின்று மானி மானு என்னும் வினைகள் தோன்றும்.

மானித்தல் = அளத்தல், வெப்பத்தை அளப்பது வெப்பமானி.

= மதித்தல், கா ! அபிமானி (இரு பிறப்பி);
மதித்தளிக்கும் நிலம் மானியம் -மானிபம்,
= அளவையாலறிதல், கா: அனுமானி.
உவமானம் (ஒத்த அளவு) உபமானவ)--