பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூக ஒப்பியன் மொழிநூல்


உவத்தல் - விரும்பல், ஒத்தல். ஒ. நோ. like = to be pleased with, to resemble, விழைய நாட என்பவை உவமவுருபுகள்,

உவமை-உவமம் -உவமன். உவமை-உபமா (வ.)

மானுதல் = ஓரளவாதல், ஒத்தல். மான (போல) உவம வுருபு. மானம் என்னும் சொல்லே மோன மூன் முதலிய பல வடிவுகளாகத் திரிந்து மேலையாரிய மொழிகளில் நிலாவைக் குறிக்கும்.

Moon. Lit, the 'measurer of time' found in all the Teurt. languages, also in 0. slav. menso, L. mensis, Gr. mene all from root ma, to measure என்றார் சேம்பராரும்

Moon-month. Moon day- Monday. Moor என்பது மிகப் பழைமையான சொல்லென்பர் மாக்ஸ்முல்லர்.

மா + திரம் = மாத்திரம் = மாத்திரை = அளவு.

Gr.metron, Li mensura, Fr. mesure, E, measure Gr. metron, Fr.-L. metrum, E. metre, poetical measure, E, meter, a measurer:

Geometry. Fr.-L.-Gr- geometria-geometreo, to measure land-ge, the earth, metreo, to measure. கூ-ge. கூவளையம் -- குவலையம் = நிலவட்டம். Mother என்னும் முறைப் பெயரும் மா என்பதன் அடிப் பிறந்ததாகவே சொல்லப்படுகிறது. Mother, M. E. moder-A. s. noder, cog with Dut; moder, Ice. modhir, Ger. mutler, Ir. and Gael, mathair, Russ. mate, L. mater, Gr, meter, Sans. mata, matri, all from the Aryan root ma, to measure என்றார் சேம்பரார்.

மேனாட்டார் தமிழைச் சரியாய்க் கல்லாமையால், பல தமிழ் வேர்ச்சொற்களை ஆரிய வேர்ச்சொற்களாகக் கூறுவர்.

mother என்னும் பெயர் மாதர் என்னும் சொல்லாகத் தெரிகின்றது. மா+து = மாது. மாது+ அர் = மாதர் =பெண், காதல், அம்மை அன்னை அத்தி அச்சி முதலிய பெயர்கள்