பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பின்னிணைப்பு II

௩௩௧

உயர்திணையில் தாயையும் பெண்பாலையும் குறித்தல்போல, மாதர் என்னும் சொல்லும் குறித்திருக்கவேண்டும். இங்கு மாதர் என்பது வண்டர், சுரும்பர் என்பன போல அர் என்னும் விரியீறு பெற்ற ஒருமைப் பெயர்.

"மாதர் காதல்" என்றார் தொல்காப்பியர். எழுமாதர்= the seven divine mothers, Matron, Fr.-L, matrona, a married lady,—mater, mother? Matter, Matrix, matriculate, matrimony முதலிய சொற்களும், matter, (mother) என்பதனடியாகப் பிறந்தவையென்றே சொல்லப்படுகின்றன.

மாத்திரை—மாத்திரி—மாதிரி, F. madulus, Fr; modele - E. model. மாதிரி—மாதிரிகை. (மாத்ரகா, வ.)

பின்னிணைப்பு II

அர் என்னும் வேர்ச்சொல்

அர் என்பது ஓர் ஒலிக்குறிப்பு. அரித்தல்1 அர் என்னும் ஒலி தோன்ற எலி புழு முதலியவை ஒரு பொருளைத் தின்னல் அல்லது குறைத்தல், அர—அரா—அரவு—அரவம் = ஒலி, (இரையும்) பாம்பு. அரித்தல் நுண்ணிதாயொலித்தல், கா, அரிக்குரற்பேடை அரித்தல். அறுத்தல், கா: அரிவாள்மனை (அரி)—(அரம்) — அரங்கு: அரங்கல் அறுத்தல். அரங்கு = அறை, ஆற்றிடைக்குறை. அரங்கு—அரங்கம், அரங்கு—அரக்கு—அரக்கன் = அழிப்பவன், அரித்தல் 4 வெட்டுதல், கா : கோடரி (கோடு+அரி) = மரக்கிளையை வெட்டுங்கருவி, கோடரி—கோடாரி—கோடாலி. அரித்தல்" அராவுதல், அரி+ அம் = அரம்—அரவு—அராவு; அரித்தல்' அராவுதல் போல உடம்பிலுண்டாகும் நமச்சல், அரிப்பெடுத்தல், புல்லரித்தல் என்னும் வழக்குகளை நோக்குக. அரித்தல் அரிப்பெடுக்கும்போது சொறிதல்போல, விரல்களால் ஒரு பொருளை வாரித்திரட்டல். அரிப்பது அரிசி. அரிசிபோற் சிறிய பல் அசிசிப்பல்: சிறிய நெல்லி அரிநெல்லி, அரி = நுண்மை , அழகு, அரித்தல்' அழித்தல், அரி = பகைவன், சிங்கம், அரசன் தேவர்க்கரசனாகிய இந்திரன். கோளரி = கொல்லும் சிங்கம்: அரி= அழிப்பவன், அழிப்பது; கா முராரி, ஜ்வரஹரி (வ). அரி—ஹரி (வ). அரி—அம்= அரம்=அழிவு, துன்பம் | E-Ger; barm. அரம்=—அரத்தை அளி+