பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரியர் தொல்லகம்

19

உழவை,

“சுழன்றுமேர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”

என்றும்,

“உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு”

என்றும் உயர்த்துக் கூறுவர் தமிழர். ஆனால், ஆரியரோ,

“சிலர் பயிரிடுதலை நல்ல தொழிலென்று நினைக்கின்றனர். அந்தப் பிழைபபு பெரியோர்களால் பழிக்கப்பட்டது. ஏனெனில், இரும்பை முகத்திற்கொண்ட கலப்பையும் மண்வெட்டியும், நிலத்தையும் நிலத்திலுள்ள பல உயிர்ப்பொருள்களையும் வெட்டுகின்றனவல்லவா?” (மனு. 10 : 84) என்று இழித்துக் கூறுவர்.

ஆரியர் தொல்லகம்

“ஆரிய வரணத்தின் தொல்லகம் ஆசியாவிலன்று, பால்டிக் நாடுகளிலும் காண்டினேவிய நாட்டிலுமேயிருந்தது. அங்கே ஆரிய மொழிகள் எழுந்தன. அவற்றை வழங்கிய உயரமான, நீலக்கண்ணும் வெளுத்த மயிநம் வாலமுகமுங் கொண்ட மக்கள் அங்குநின்றும் பரவினபோது, அம்மொழிகளும் அவர்களுடன் பரவின. அவர்கள் மணக்கலப்பாலேயே, தங்கட்கு இனமாகவும் அயலாகவுமுள்ள மக்கள் மேல், தங்கள் தலைமையையும் மொழிகளையும் ஏற்றுவதில் வெற்றி பெற்றார்கள். இந்தியாவிலும் ஐரானிலும் உள்ள கீழையாரியர், ஆரிய வரணத்தின் கடைசியும் மிகச்சேய்மையுமான கிளையினராவர். அவர்கள் பெரிய ஆற்றொழுக்கங்களைப் பின்பற்றி வந்து, கடைசியில் பஞ்சாப்பில் தங்கினார்கள்,” என்று முதலாவது லத்தாம் (Latham) எடுத்து விளக்கி, பின்பு மாந்தனூலும் (Anthropology) மொழிநூலும் பற்றிய சான்றுகளால், பொயஸ்கே (Poesche) யும் பெங்கா (Penga)வும் திறம்படத் தாங்கிய கொள்கையை நான் முற்றும் ஒப்புக் கொள்ளுகிறேன்”[1] என்று சாய்ஸ் (Sayce) கூறுகிறார்.

“மொழியின் கூற்றுகளை நன்றாய் ஆராயும்போது, அவை கதையை மிக வேறுபடக் கூறுகின்றன. ஆதி ஆரியன் உண்மையாகவே முரட்டுத் தன்மையுள்ள துப்புரவற்ற


  1. Principles of Comparative Philology, Preface to the Third Edition, p. xviii—xix.