பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

அருகிய நூல்வழக்கேயன்றி, ஐயன் என்னும் பெயர்போலப் பெருவாரியான தமிழ்நாட்டுலக வழக்கன்று?

ஐயன் என்னும் பெயர் ஆரியன் என்னும் பெயரின் சிதை வாயின் இவ்வொரே பெயரைத் தந்தை பெயராகக் கொண்ட பறையர் ஆரியராதல் வேண்டும். தனித் தமிழரும் பார்ப் பார்க்கு மிகச்சேயவருமான பறையர் அங்ஙன மாகாமையின், 'ஐயன்' என்னும் சொல் 'ஆரியன்' என்னும் சொல்லின் சிதைவன்று.

'Ar' (to plough) என்பதை ஆரியன் என்னும் பெயருக்கு வேராகக்கொள்வர் மாக்சுமுல்லர்.

அந்தணன் என்னும் பெயரும் ஐயன் என்னும் பெயர் போன்றே பார்ப்பனருக்கு அமைந்ததாகும். ஆனால், இன்னும் நூல் வழக்காகவே யுள்ளது.

அந்தணன் என்பதை அந்தம்+அணன் என்று பிரித்து, மறை முடிபு (வேதாந்தம்) களைப் பொருந்துகின்றவர் என்று பொருளுரைப்பர் வடமொழிவழியர் : அம் + தண்மை+அன் என்று பிரித்து அழகிய குளிர்ந்த அருளையுடையவர் என்று பொருளுரைப்பர் தென்மொழியாளர். வடமொழி வழியிற் பொருள்கொள்ளினுங்கூட, அணவு என்னும் சொல் என்னும் வேரிற்பிறந்த தனித்தமிழ்ச்சொல்லாதலின், அந் தணன் என்பது இருபிறப்பி (Hybrid)யாகும்.

அந்தணன் என்னும் பெயர் அத்தணாளன் (அம் + தண் + ஆளன்) என்ற வடிவிலும் வழங்கும்.

"அந்த ணாளர்க் குரியவும் அரசர்க்
கொன்றிய வரூஉம் பொருளுமா ருளவே"

"அந்த ணாளர்க் கரசுவரை வின்றே'

என்று தொல்காப்பியத்திற் (மரபியல், 68.80) கூறியிருப்ப தால் பார்ப்பனருக்குக் தொல்காப்பியர் காலத்திவேயே தமிழ்நாட்டில் அரசுவினையிருந்த தாகச் சிலர் கூறுகின்றனர்!

அந்தணர் என்னும் பெயர்.முதலாவது, தனித்தமிழ் முனிவரைக் குறித்ததென்று முன்னமே கூறப் பட்டது.

அத்தர் என்னுஞ் சொல்லின் (அழகிய குளிர்ந்த அருளையுடையவர் எனனும்) பொருளுக்கேற்ப,