பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பார்ப்பார், ஐயர், அந்தணர் என்னும் பெயர்கள்

35

"அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்”

என்று அந்தணர்க் கிலக்கணங் கூறினதுமன்றி, அதைத் துறவிகளைப் பற்றிக்கூறும் "நீத்தார் பெருமை' என்னும் அதிகாரத்திலும் வைத்தார் திருவள்ளுவர்.

"நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரமென்ப"

என்று தொல்காப்பியத்தில் கூறிய முனிவர் செய்தியையே,

"நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்"

அருள் என்னும் குணம் துறவிகட்கே உரியதாகும் அதனால்தான், அருளுடைமை, புலான்மறுத்தல், கொல் லாமை என்னும் மூன்றையும் திருவள்ளுவர் இல்லறத்திற் கூறாது துறவறத்திற் கூறினர். பிரா மணருக்கு அருளில்லை யென்பது, மனுதரும நூலாலும், இப்போது அவர் பிறரை முக்கியமாய்க் கீழோரை நடத்தும் வகையினாலும் அறியப் படும். உணவுக்கு வழியற்றவரையும், ஒழுக்கங் குன்றிய வரையுங்கூடக் கூசாமல் முனிவரென்று கூறுவது ஆரிய வழக்கம்.

அஜீகர்த்தரென்னும் முனி பசியினால் வருந்தி, சுநச் சேபள் என்னும் தம் மகனை, வேள்வியிற் பலியிடும்படி நூறு ஆவிற்குத் தாமே விற்றார். பசிக்கு மாற்றஞ்செய்தபடியால், அதனால் அவருக்குப் பாவம் தேரிடவில்லை" என்று மனு தரும நூல் (10; 105) கூறுகின்றது.

பிராமணருக்குக் கலியாணத்திற்கு முந்திய நிலைபிரம சரியமென்று பிரிக்கப்படுவதனாலும், துறவறத்தின் முற்பகுதி யான வானப் பிரத்தத்தில் குடும்ப வாழ்க்கை கூறப்படுவத னாலும், பிராமணர் ஊருக்குப் புறம்பாகவிருப் பின், எந்த நிலையிலும் தம்மைத்துறவிகளாகக் கூறிக்கொள்ள இடமுண்டு.

தமிழ் முனிவரான அந்தணர். சிறந்த அறிஞராயும் ஆசிரியராயும் ஆக்கவழிப் பாற்றலுள்ளவராயும் இருந்தமையின், அரசர்கள் அவர்களை மதியுரைக்கும் தற்காப்பிற்கும் துணைக் கொண்டனர் இதையே, திருவள்ளுவர் திருக்குறட் பொருட் பாலில், 'பெரியாரைத் துணைக்கோடல்', பெரியாரைப்