பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

முன்னுரை

பிழையாமை' என்ற அதிகாரங்களிற் கூறுவர். அரசர்கள் போர், வேட்டை முதலியனபற்றிச் சென்றபோது. அவர்கட்குத் துணையாயிருந்த அந்தணரே அரசு செய்யக் கூடும். இதையே “அந்தணாளர்க் கரசு வரைவின்றே” என்னும் நூற்பா குறிப்பதாகும்.[1] 'வரைவின்றே' என்பது விலக்கப்படவில்லை என்று பொருள்படுமேயன்றி, என்றுமுரியது என்று பொருள் படாது. இரண்டாம் குலோத்துங்கச் சோழனுக்கு ஒட்டக்கூத்தர் அமைச்சராயிருந்து, அவன் மணஞ்செய்த புதிதில் சிறிது காலம் அவனுக்குப் பதிலாய் ஆண்டார். இதனால், அரசுரிமை புலவர்க்கெல்லாமுண்டென்று கொள்ளுதல் கூடாது. ஆனால்,அதே சமையத்தில், அது அவர்க்கு விலக்கப்பட வில்லை என்றும் அறியலாம்.

தமிழ்நாட்டிற்கு முதன்முதல் வந்த ஒருசில ஆரியப் பிராமணர், தமிழ அந்தணர் போலத் துறவிகளாகத் தோன்றியமையால் அந்தணரோடு சேர்த்தெண்ணப்பட்டார். இதை,

“நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய” (தொல். 160)

என்பதால் அறியலாம்.[2] இந் நூற்பாவிற் குறிக்கப்பட்ட நூல் முதலிய நான்கும் ஆரியர்க்கேயுரியன. தமிழ முனிவர் உயர்ந்த நிலையினராதலின் இத்தகைய பொருள்களைத் தாங்கார்.

“மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகை” (குறள். 245)


  1. இந்நூற்பாவிற்கு,'அரசர் இவ்வழி அந்தணரே அவ்வரசியல் பூண்டோளுகளும் வரையப்படாது என்றவாறு"என்று பேராசிரியர் உறைகூறியதுங் காண்க.
  2. #ஆயுங்காலை என்றதனால், குடையுஞ் செருப்பும் முதலாயினவும் ஒப்பன அறிந்துகொள்க. (உ-ம்)

    “எறிந்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழ
    லுறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலும்”
    (பாலைக்கலி.9)

    ......இன்னும் 'ஆயுங்காலை' என்றதனான். ஓருகோலுடையார் இருவருளர். அவர் துறவறத்து நின்றாராகலின் உலகியலின் ஆராயப்படாரென்பது முக்கோலுடையார் இருவருட் பிச்சை கொள்வானும், பிறாண்டிருந்து தனதுண்பானும் உலகியலின் நீங்காமையின் அவரையே வரைந்தோதினானென்பது” (தொல். 610, பேரா. உரை)