பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

ஒப்பியன் மொழி நூல்

கோலுவதே 'ஒப்பியன் மொழி நூல்' என்னும் இவ் ஒப்பற்ற நூல்; இதன்கண் தமிழினத்தின் வரலாறும், தமிழ் மொழியின் இலக்கண அமைவும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கப்பட்டு உள்ளன. ஆரிய திராவிட நாகரிக வேறுபாடுகள், பார்ப்பனர் தமிழரை வென்ற வகை, ஆரியத்தால் தமிழ் கெட்டமை, மொழி நூல் நெறிமுறைகள், தொல்காப்பியம் பற்றிய ஆராய்ச்சி, தமிழகத்தின் தொன்மைக் குறிப்புக்கள், தமிழிலக்கண இலக்கியத் தோற்றம், உலக முதன் மொழிக் கொள்கை ஆகிய செய்திகள் தக்க அகப்புறச் சான்றுகளுடன் விளக்கமாகக் கூறப்படுகின்றன.

இந்நூலைப் பயில்வோர் தமிழக வரலாறு, தமிழ் மொழி இலக்கணம் ஆகிய இரண்டினையும் ஒரு சேரப் புரிந்து கொள்ள லாம். இத்தகைய நூல்கள் போதிய அளவு வெளிவராமை யாலும், வெளிவந்த நூல்களை விரும்பிப் படிப்பார் இன்மையா லுமே தமிழகம் தாழ்ந்தது. தமிழன் தன்னையே மறந்தான்; தமிழர் ஏமாந்த காலத்தில் ஏற்றம்கொண்ட ஆரியப் பார்ப்பனர் அரசியல் துறையிலும், சமயத் துறையிலும் தலைமையேற்றுத் 'தமிழன் என்றோர் இனம் உண்டு' என்ற உண்மையினையே மறைத்துவிட்டனர். இன்று அந்நிலையினின்று மீளத் தமிழர் அரும்பாடுபட வேண்டியதாயிற்று.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாகத் தமிழரிடையே விழிப் புணர்ச்சி தோன்றி, அதன் விளைவாக மாண்ட அவர் தம் பெருமை மீளத் துவங்கியுள்ளது. தமிழக வரலாறு-மொழி-கலை- நாகரிகம் இன்ன பிறவற்றை அறிந்து கொள்ளும் வேட்கை கற்றவர்களிடையே அரும்பியுள்ளது. எனவே தான் இத்தகைய வேளையில் இத்தகைய வரலாற்று அடிப்படையுடன் கூடிய இலக்கண நூல்களைப் புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபடலானோம்.

மொழிப் பேரறிஞர் தேவநேயப் பாவாணர் அவர்கள், மொழிப் பற்றும், இனப்பற்றும் மிக்கவர். நல்ல ஆராய்ச்சியாளர்; பயனுள்ள நூல்களை ஆக்கும் பன்மொழிப் புலவர்: அத்தகைய அறிஞர் எழுதிய இந்நூல் 1940-ஆம் ஆண்டில் முதற் பதிப்பாக வெளிவந்தது. இப்போது திருந்திய