பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

முன்னுரை

இங்ஙனம் நூற்றுக்கணக்கான வடசொற்கள் தமிழில் வேண்டாமை (அனாவசியம்) யாய் வழங்குகின்றன. இவை எங்ஙனம் வந்தன? தமிழர் மொழி வடமொழியன்று. ஆகவே வடசொற்கள் தமிழர்கட்குத் தெரியா? அவை பார்ப்பனரே தொன்று தொட்டுச் சிறிது சிறிதாய்த் தமிழில் நுழைத்தவை யாகும். தமிழ் நாட்டுக் கல்வியும், மதமும் பார்ப்பனர் வயப் பட்டமையான், அவ்விரண்டையும் நிலைக்களமாகக் கொண்டு, பலவகையில் புகுத்தினவாகும் தமிழிலுள்ள வடசொற்கள், இன்றும், பல வடசொற்கள் தமிழுக்கு வந்துகொண்டேயிருக் கின்றன. பார்ப்பனர் தென் சொற்களை அறிந்திருத்தாலும், அவற்றிற்குப் பதிலாக வடசொற்களையே வழங்குவது வழக்கம். பழக்கத்தைப் பரிச்சயம் என்றும், சுவையாய் என்பதை ருசிகர மாய் அல்லது சுவாரசியமா' என்றும் சொல்லுவர் அவர். கல்லாத தமிழர் பார்ப்பனரை உயர்ந்தாராக மயங்கினமையின், அவர் பேச்சைப் பின்பற்றுவது பெருமையென்று பின்பற்றினர். பார்ப்பனப் பாடகா, தமிழில் இப்போதுள்ள வடசொற்கள் போதாவென்று, திருமணத்தைப் பரிணயம் என்றும், அடியாரைப் பக்தரென்றும் கூறிவருகின்றனர்.

தமிழ் நாட்டில், பல பொதுவான தென் சொற்களுக்குப் பதிலாசு வடசொற்களை வழங்கினதுடன், ஆட்பெயரும், இடப்பெயரும் தெய்வப்பொருமான பல சிறப்புப் பெயர்களையும் மொழிபெயர்த்து வழங்கினர் பார்ப்பனர். கயற் கண்ணி, தடங்கண்ணி, அழகன் என்னும் ஆட்பெயர்கள் முறையே மீனாக்ஷி, விசாலாக்ஷி, சுந்தரன் என்றும்; பழமலை, மறைக்காடு என்னும் இடப்பெயர்கள் முறையே விருத்தாசலம், வேதாரண்யம் என்றும், ஆறுமுகம், சிவன், தாயுமான தெய்வம் என்னும் தெய்லப் பெயர்கள் முறையே, ஷண்முகம், சங்கரன், மாதுருபூதேஸ்வரர் என்றும் வழங்கி வருதல் காண்க.

ஒரு நாட்டார், இரண்டொருவராய், நாடு காண்பவர் போலும் . வழிப்போக்கர் போலும், பிழைக்கப்போபவர் போலும், மற்றொரு நாட்டிற் போயமர்ந்து, பின்பு பெருத் தொகையினரானவுடன். அந்நாட்டைக் கைப்பற்றுவது ஒரு. வலக்காரமான வழியாகும், இது மொழிக்கும் ஓக்கும், வட சொற்கள் தமிழில் மிகச் சிலவாயிருந்த பண்டைக்காலத்தில், தமிழைக் கெடுப்பதாகத் தமிழர்க்குத் தோன்றவில்லை : ஆனால், இதுபோதோ, - தமிழே வடமொழியினின்றும் பிறந்ததே என்று ஆராய்ச்சியில்லாதார் தம்புமளவு: அளவிறந்த வடசொற்கள் தமிழிற் கலந்துள்ளன;