ஒய்யாரி
33
‘நித்திய கல்யாணியின் விஷமூச்சில் பிறந்த நாகம் தினந்தோறும் மணமகனை பிணமகனாக்கி யிருந்தாலும் இருக்கலாம்...’
‘அரைவெட்டு’ வாலாட்டியது மறுபடியும். ‘அது தப்பு ஒவ்வொரு இரவிலும் புதுமண மதுவின் தேறல் பருகும் எண்ணத்தினளாய் அவளே மணமகனைக் கொன்று வீட்டு சாபம் என்று புரளி கட்டி விட்டிருக்கலாம் அல்லவா?’ எனப் பிரசங்க தோரணையில் தொடங்கினார் அவர்.
‘இருக்கலாம். அதையே தான் நானும் சொல்ல வந்தேன்.’
‘சரி. இந்த வீண் கதாகாலட்சேபம் ஏன்? உமது ஆராய்ச்சித் திறனை அறிவுறுத்தவோ?’ என்று கெண்டை பண்ணினார் அ. வெ.அறிஞர்.
‘இவன் யாருடா இவன்—பெரிய இவரு மாதிரி! மூஞ்சியும் மோறைகளும் ! மெத்தப் படிச்சவரு இவரு! ’என்று முணமுணப்பு பரவியது.
‘வந்து....விஷயம் என்னன்னு கேட்டா, நம்ம ஊரு மோகினி இருக்காளே அவ கதையிலே வாற நித்திய கல்யாணி மாதிரி...’
‘இருக்குமய்யா இருக்கும்!’
‘நான் சொல்றேன், அவ மோகினிப் பிசாசின் அம்சமாகத் தானிருக்கணும். கவனிச்சிகளோ - நம்ம பண்ணையார்வாள் தலைமறைவா ஒடிப்போன தினத்தன்று தான் பெளர்ணமியும்’ என்று குரல் கொடுத்தார் பஞ்சாங்கதாசர்.
‘போனதைப் பற்றிப் பேசி என்ன செய்ய? இனி மேல் நடப்பது...’
‘யாரறிவார் - நாடகமே உலகம்’ என்று ராகமிழுத்தார் ஒரு அன்பர்.