ஒய்யாரி
45
‘உனக்கு நம்பிக்கை இல்லையா?’ என்று கேட்டு மோகினி எழுந்து சென்று வாசல் கதவைச் சாத்தித் தாழிட்டு விட்டு வந்தமர்ந்தாள். அவள் மேலாடை நழுவிக் கீழே விழுந்தது. பளபளக்கும் பட்டு ஜாக்கட்டுடன் மினுமினுக்கும் பந்தனைய மார்பகம் மேல் அவன் கண்கள் நிலைத்தன. மோகினி குறும்பாகச் சிரித்தபடி ஜாக்கட் முதலியவைகளுக்கு விடை கொடுத்து விட்டெறியவும், நாடகக்காரர்கள் பெண் வேஷத்திற்கு உபயோகிக்கும் ‘அலங்காரத் துணை’ கண்களை உறுத்தியது. பெண்களின் எடுப்பான கவர்ச்சியை நையாண்டி செய்வது போலிருந்தது அவ்வேளையத் தோற்றம். மோகினியின் கருங்குழற் பின்னல் கழன்று கையோடு வந்தது. சாடக மேடையின் பின்புறம் வேஷம் கட்டி பவுடர் பூசிக் கொள்ள அமைந்துள்ள அறையில் அறைகுறை அலங்காரத்தோடு உட்கார்ந்திருக்கும் ஸ்திரீ பார்ட்காரன் மாதிரி இருந்தது மோகினியின் தோற்றம்.
‘போதும் போதும்’ என்று அவசரமாக அறிவித்தான் வாசுதேவன். ‘அது சரி. உன்னிடம் ஏமாந்தவர்கள் நீ செய்வது மோசடி என உணர்ந்தும் உன்னைக் காட்டிக் கொடுத்திருந்தால்?’’ என்று கேட்டான்.
‘உண்மையை யாரும் அம்பலப்படுத்தவில்லையே. பின் வீணாக எதற்கு......’
‘இல்லை. சொல்லி யிருந்தால் என்ன செய்திருப்பாய்?
‘சொல்லமாட்டார்கள் என்ற துணிச்சல்தான் துணை. மனிதரில் பெரும்பாலோருக்கு குலப்பெருமை, போலி கெளரவம், பெரிய மனுஷத்தனம், அந்தஸ்து என்று வீண் சபலங்கள் உண்டு. நாகரிக ஆசாமி தெருவில் விழுந்து விட்டால், எழுந்ததும் அடிபட்டு விட்டதா என்று பார்ப்பது பிறகு தான். தான் விழுந்ததை யாரும் கவனிக்கவில்லையே என்று தான் அவன் பார்வை ஆராய்கிறது முதலில். பக்கத்தில் யாருமில்லை யென்றால் அடிபட்ட இடத்தைத் தடவுவான். தூரத்தில் சிலர்