பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

இருப்பதையும், புற்கள் பசுமையாகத் தளதளவென்று தலை நிமிர்ந்து நிற்பதையும் கண்டு பெரு வியப்படைந்தான். பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனுக்குத் தன் நாயின் நினைப்பு வந்தது.

சுற்று முற்றும் அவன் தன் நாயைத் தேடிக் கொண்டு சென்றான். நெருப்புச் சாம்பலின் ஊடே அதன் காலடித் தடம் கண்டு பின்பற்றிச் சென்றான். குளத்தின் கரையில் தன் அருமை நாய் சுருண்டு கிடப்பதைக் கண்டான். நெருங்கிச் சென்று பார்த்த போது, அதன் உடல் முழுவதும் நனைந்திருப்பதையும். ஆங்காங்கே தீச்சுட்டுப் புண்கள் நிறைந்திருப்பதையும் கண்டான்.

அவனுக்கு எல்லாம் விளங்கிவிட்டது. தன்னைக் காப்பாற்றுவதற்காக அந்த நாய் தன்னுயிரைக் கொடுத்திருக்கிறதென்ற உண்மையை அவன் புரிந்து கொண்டபோது, அவன் உள்ளத்தில் எழுந்த வேதனை இவ்வளவென்று சொல்ல முடியாது. உயிரைக் கொடுத்துத் தன்னைக் காத்த அந்த நாயின் நன்றியைத் தேவநாதனால் மறக்க முடியவில்லை.