10
"வீண் பிதற்றல் வேண்டாம். கூறுவதைக் கவனித்துக் கொள். அந்தக் கிழவன் அணிந்திருக்கிறானே மேல் சட்டை, அதை அவன் உடலிலிருந்து பறித்தெறிய வேண்டும். என் ஆற்றலை நான் காட்டுகிறேன், உன் ஆற்றலை நீ காட்டுவாயா?" என்று கேட்டான் காற்றண்ணன்.
சரி என்று சவாலை ஏற்றுக் கொண்டான் கதிரவன்.
காற்றண்ணன் தன் வல்லமையைக் காட்டத் தொடங்கினான்.
ஊய் ஊய்! என்று, காற்று வீசத் தொடங்கியது, தெருவில் கைத்தடி ஊன்றித் தள்ளாடி நடந்து செல்லும் கிழவனின் மேல் சட்டையைத் தன் ஊங்காரப் பாய்ச்சலால் கழற்றி எறிய முயன்றான் காற்றண்ணன்.
கிழவனுக்கு மூச்சுப் பொறுக்கவில்லை. கைத்தடியைக் கீழே போட்டான். தெருவோரத்தே இருந்த ஒரு ஒதுப்புறமான இடத்தில் போய் முடங்கிக் கொண்டான். தன் மேல் சட்டையை இழந்துவிடாமல் இறுக்கமாகப் பற்றிக் கொண்டு உட்கார்ந்து விட்டான்.
காற்று மேலும் வேகமாக வீசியது. கிழவன் குளிர் தாங்கமுடியாமல் தன் கைகளை உடலில் பதித்து மூடிக்கொண்டான்.