பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

காற்றண்ணன் கதிரவன் முன் தலை குனிந்தான். "அண்ணலே நீதான் வென்றாய்!" என்று பாராட்டினான்.

"உன் வெற்றியின் இரகசியம் என்ன?" என்று கேட்டான்.

"வன்முறையும் தாக்குதலும் வெறுப்பை உண்டாக்கும். அன்பும் அரவணைப்பும் ஆதரவைப் பெருக்கும். என் அன்புக்கைகளின் தழுவல் எனக்கு வெற்றி தேடித்தந்தது" என்றான் கதிரவன்.

அவன் வெற்றிக் கதிர்கள் உலகெங்கும் பரவிக் கொண்டிருந்தன.