பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
28

ஆனால்,

"மீனா அக்கா நலமா" என்று கேட்கவில்லை. "உன்னோடு பெரிய தொல்லை!" என்று கூறியது.

"இன்பவல்லி, உன் பச்சைக் கிளி ஏறுக்கு மாறாகப் பேசுகிறதே!" என்று கேட்டாள் மீனா.

"இல்லை இது நல்ல கிளி. சொன்னதை அழகாகச் சொல்லும்."

"பவழம் வள்ளியக்காவுக்கு வணக்கம் சொல்லு பார்க்கலாம்" என்றாள் இன்பவல்லி.

பச்சைக் கிளி தலையை ஆட்டிக் கொண்டு வாயைத் திறந்து, "எனக்கு நேரம் இல்லையம்மா" என்றது.

சூழ்ந்திருந்த மாணவர்கள் கொல்லென்று சிரித்தார்கள். இன்பவல்லி கோபத்தை அடக்கிக் கொண்டாள்.

"பவளம் என் கண்ணல்ல, கன்றுக்குட்டி போல் அம்மா கத்து பார்க்கலாம்" என்றாள்.

"போம்மா உனக்கு வேறு வேலையில்லை." என்றது பச்சைக் கிளி. தோழிப் பெண்கள் சிரித்தார்கள்.

அவர்கள் சிரிக்கச் சிரிக்க இன்பவல்லிக்கு, அழுகை அழுகையாக வந்தது.

"இந்தக் கிளி என்னை அவமானப்படுத்தி விட்டது. இது பொல்லாத கிளி, குரங்குக் கிளி" என்று கத்தினாள்.