பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

கிழவனுக்குப் பைத்தியம் முற்றிவிட்டது என்று கூறிக்கொண்டே அந்த மக்கள் திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்று கொண்டிருந்தனர்.

இந்தப் பைத்தியக்காரக் கிழவன் நாட்டைக் காப்பாற்றினானாம், நல்ல வேடிக்கை! என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே சென்றனர்.

"ஏழை அறிவாளியாக இருப்பதே பைத்தியக்காரத்தனம்!" என்று தனக்குத்தானே கூறிக் கொண்டார் கிழவர்.

தீயவர்களுக்குச் செய்யும் உதவி தீமைக்கே வித்தாகும்.