பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
49

நரி அதை உற்று நோக்கியது. 'நான் வாலை அழகுக்காக வைத்துக் கொள்ள வில்லை. வால் இல்லாவிட்டால் எனக்குச் சாவுதான் மிஞ்சும். போ போ பேசாமல் போ' என்று விரட்டியது நரி.

'அது எப்படி அண்ணா? வால் எப்படி உங்கள் உயிரைக் காப்பற்றுகிறது?' என்று கேட்டது ஈ.

'வேட்டை நாய்கள் எங்களைத் துரத்துகிற போது' நாங்கள் வேகமாக ஓடுவோம்.

நாங்கள் எந்தப்பக்கமாக ஒடுகிறோமோ அதற்கு வேறு பக்கமாக எங்கள் வாலைத் திருப்பி வைத்துக் கொள்ளுவோம். வால் திரும்பியுள்ள பக்கத்தைப் பார்த்து நாய்கள் எங்களைப் பின்பற்றி வருவதாக எண்ணிக் கொண்டு வேறு திசையில் விரட்டிக் கொண்டு ஓடும். நாங்கள் தப்பித்து கொள்வோம்.

'வால் இல்லாவிட்டால் வேட்டை நாய்கள் நேராக வந்து எங்களைக் கவ்விப்பிடித்துத் தின்று விடும்.'

நரியிடம் வால் கிடைக்காது என்று தெரிந்து கொண்டது ஈ.

அதற்குக் கோபம் கோபமாக வந்தது. பிரம்மா வேண்டும் என்றே தன்னை அலைய வைத்திருக்கிறார் என்று தோன்றியது.

யாரும் வாலைத் தர ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்தே தன்னை விரட்டியடித்திருக்கிறார். அவரைச் சும்மா விடக்கூடாது என்று நினைத்தது ஈ.