உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6


நாய் தேவநாதன் ஆடையைப் பற்றி இழுத்தது. நன்றாக உறங்கிக் கொண்டிருந்த தேவநாதன் கண் விழிக்கவில்லை.

என்ன செய்வதென்று தெரியாமல் நாய் திகைத்தது. சிறிது தூரத்தில் ஒரு குளம் இருப்பது தெரிந்தது. அதைக் கண்டவுடன் நாய் பாய்ந்தோடிச் சென்றது. அந்தக் குளத்திற்குள் இறங்கியது. உடல் முழுவதும் நனையும்படி தண்ணீரில் மூழ்கியது. பிறகு எழுந்து தேவநாதன் படுத்திருக்குமிடத்திற்கு ஓடி வந்தது. அவன் அருகில் இருந்த புல் தரையில் புரண்டது. இவ்வாறு குளத்தில் மூழ்கி மூழ்கி எழுந்து வந்து அவன் படுத்திருந்த இடத்தைச் சுற்றிலும் இருந்த புல்தரை முழுவதையும் ஈரமாக்கிக் கொண்டே யிருந்தது.

நேரம் ஆக ஆக அது குளத்திற்குப் போகும் வழியில் இருந்த மரங்களிலும் தீப்பற்றிக் கொண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரு_ஈயின்_ஆசை.pdf/8&oldid=1165184" இலிருந்து மீள்விக்கப்பட்டது