பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

ஒரு கோட்டுக்கு வெளியே ...



அப்புறப்படுத்தும் ரயில்வே ஸ்டேஷனுக்கு நடந்தாள். அவளைச் சந்தேகத்துடன் பார்த்து. "நீ யார்" என்று கேட்ட ரயில்வே போலிஸ்காரரிடம் "கடயத்துக்குப் போறேன்" என்று கூசாமல் சொன்னாள். அப்படிச் சொன்னதற்காக அவளே ஆச்சரியப்பட்டாள், 'நாலு இடம் பழகினால், பொய் தானா வரும் போலிருக்கே. இதனாலதான் விவசாயிங்களவிட, வியாபாரிங்களும், வியாபாரிகளவிட படிச்சவங்களும் அதிகமாப் பொய்' சொல்றாங்க. கஷ்டம் தானாக வந்தா பொய்யும் தானா வரும் போலிருக்கு. அப்படின்னா கஷ்டப்படாம ஜேஜேன்னு வாழ்றவங்களும் எதுக்காவ பொய் சொல்றாங்க?"

லோகுவின் இன்ப நினைவும், அய்யாவின் துன்ப நினைவும் மாறிமாறித் துரத்த. அவற்றைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தூக்கதேவனிடம் அடைக்கலமானாள். காலையில் கண்விழித்த உலகம்மை, ஓட்டமும் நடையுமாக அய்யாவைப் பார்க்க ஓடினாள். அவர் 'குத்துக்கால்' போட்டு உட்கார்ந்து இருந்தார். அப்படி இருந்தால், அவர் பசியைப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். அவளுக்கும் பசி. நல்லவேளை முந்தானியில் ரூபாய் முடிச்சி இருந்தது.

ஹோட்டலில் போய், இரண்டு இட்லி தின்னலாமா என்று நினைத்தாள். இதுவரை ஹோட்டல் பக்கம் போகாதவள், இப்பவும் போக விரும்பாதவள் போல், ஒரு பக்கடையில், இரண்டு 'பன்கள்' வாங்கிக்கொண்டாள். ஒரு மயையும் கண்ணாடி கிளாசில் வாங்கிக்கொண்டு, கிளாவிற்கு பிரதியாக ஐம்பது பைசாவை. 'டிபாசிட்டாக'க் கொடுத்துவிட்டு, அய்யாவிடம் வந்தாள், கண்ணாடி டம்ளரைக் கொடுக்கப் போகும்போது, மூன்று பழங்களை வாங்கி மடியில் வைத்துக் கொண்டாள். அங்கே சாப்பிட, அவளுக்குக் கூற்று. எவரும் பார்க்காத இடத்திற்குப் போய்ச் சாப்பிடலாம் என்று நினைத்து. பின்னர் பசியையும் மறந்தவளாய், அலுவலகத்திற்கு வருவதுபோல், 'கரெக்டாக' வந்து, போலீஸ் ஸ்டேஷனில், ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்த பெண்களுடன் அவளும் சேர்ந்து கொண்டாள்.

அப்படியும் இப்படியுமாக ஒருநாள் உருண்டோடி விட்டது. சப் இன்ஸ்பெக்டரைக் காணவில்லை. மறுநாள், அவர் எப்போது வருவார் என்று, வருகிற மோட்டார் சைக்கிள்களைப் பார்த்துக் கொண்டிருந்த உலகம்மை, அவர் ஜீப்பில் இருந்து இறங்கியதைப் பார்த்ததும், எதிர்பாராத மகிழ்ச்சியில் எழுந்தாள். கொஞ்சம் பொறு. வந்தவரு இருக்கவங்கள திட்டி முடிச்சி அலுத்துப் போவட்டும். அப்ப