பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்னுரை

இந்த நாவல் 1971ஆம் ஆண்டில் வெளியானது. ‘சோற்றுப் பட்டாளம்’ பிரசுரமான முதலாவது நாவல் என்றாலும் ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ தான் நான் முதல் முதலாவதாக ஆக்கிய புதினப்படைப்பு. அண்மையில் பெய்த பேய் மழை போல் ஒரு மழை அடித்த போது, செங்கை மாவட்ட உத்திரமேரூரில் அரசுப்பணி சார்பாகச் சென்றிருந்தேன். அங்குள்ள சுற்றுலா மாளிகையில் இந்த நாவலுக்குப் பிள்ளையார் சுழி போட்டது. இப்போதும் நினைவைப் பசுமைப்படுத்துகிறது.

இந்த நாவலில் வரும் உலகம்மையும் மாயாண்டியும் சோகச் சுமையில் தவித்த போது நான் மாலை மாலையாகக் கண்ணீர் விட்டுக் கட்டிலில் குப்புறப்படுத்து அழுதிருக்கிறேன். இத்தகைய அனுபவம் என்னுடைய ஆத்மார்த்த குருவான ‘லியோ டால்ஸ்டாய்க்கு’ ஏற்பட்டதாகப் பின்னர் அறிந்தேன். இந்த நாவலுக்குப் பிறகு எத்தனையோ நாவல்களை நான் எழுதினாலும் இத்தகைய அழுகை அனுபவம் அதிகமாக ஏற்பட்டதில்லை. ஆனாலும் அண்மையில் அலிகளைப் பற்றிய ஒரு நாவலை நான் எழுதும் போது இப்படிப்பட்ட கசிந்துருகும் நிலைமை ஏற்பட்டாலும் அது உலகம்மை அளவுக்கு உயரவில்லை. இது முதிர்ச்சியோ, அல்லது மனதைக் காலம் மரக்கடித்து வருகிறதா, என்பது புரியவில்லை.

இந்த நாவல் சென்னை வானொலி நிலைத்தில் என் அரும்பெரும் நண்பரும் கோவை வானொலி நிலையத்தின் இப்போதைய இயக்குநருமான திரு. கணேசன் அவர்களால் நாடகமாக வடிவமைக்கப்பட்டுப் பின்னர் அகில இந்திய அளவில் சிறந்த நாடகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதினான்கு மொழிகளில் ஒலிபரப்பாயிற்று. இதற்கு எழுத்தாளர் பாண்டியராஜன் அருமையாக வசனம் எழுதியிருந்தார். இப்போது அரசுடமை நிறுவனமான “நேசனல் புக் டிரஸ்ட்”-ஆல் பதினான்கு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நாவலைத் திரைப்படமாக்கச் சினிமாக்காரர்கள் கொடுத்த முன்பணமே ஒரு திரைப்படக் கதாசிரியருக்குக் கிடைத்திருக்கக்கூடிய பணத்தைவிட அதிகம். ஆனாலும் பலர் இதில் சாதி