பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

ஒரு கோட்டுக்கு வெளியே ...


எதுக்காக அழுதோம் என்பது அவளுக்கே தெரியாதபோது, லோகுவுக்குச் சரியாகத் தெரிந்திருக்க முடியாது. இப்போது கிட்டத்தட்ட தொட்டுவிடும் தூரத்திற்கு அவன் இடைவெளியைக் குறைத்துக்கொண்டு. அவளை விழித்த கண் விழித்தபடி, திறந்தவாய் திறந்தபடி பார்த்தான். அவள் விம்மலுக்கிடையே பேசினாள்.

“நாலையும் யோசித்துப் பாத்தேன். இதனால ஊர்லயும் ஒரு மொள்ள மாறிப்பய என்னப் பாத்துக் கேக்கக்கூடாத கேள்வியக் கேட்டுட்டான். அதப்பத்தி எனக்குக் கவல இல்ல. ஆனால் பழி பாவம் வந்து அதுக்கு நான் காரணமாவக் கூடாதுன்னுதான் நடந்ததச் சொல்ல வந்தேன். அதோட இன்னொண்ணு. எங்க சரோசாக்கா அழகு இல்லாம இருக்கத மறைக்க விரும்பல. அழகு முக்கியமா? அஞ்சு விரலும் ஒண்ணா இருக்குமா? எங்க அக்கா குணத்துக்காகவே நீங்க கட்டலாம். யாரையும் நீன்னுகூடச் சொல்லமாட்டா. குனிஞ்ச தல நிமுர மாட்டா. ஒரு ஈ காக்கா அடிபடக்கூடச் சம்மதிக்க மாட்டா. லட்சக்கணக்கா சொத்து இருந்தாலும் கொஞ்சங்கூட மண்டக்கெனம் கெடையாது. அவளமாதிரி ஒருத்தி இனிமதான் பிறக்கணும். அவள கட்டுறதுக்கு நீங்க குடுத்து வச்சிருக்கணும். ஒங்கமேல உயிரையே வச்சிருக்கா.”

அவன், அவளைப் பார்த்த விதத்தில் பயந்து போனவள் போல், அவள் பேச்சை நிறுத்தி. சிறிது விலகி நின்று கொண்டாள். அதிகப் பிரசங்கித்தனமா படிச்சவன்கிட்ட பட்டிக்காட்டுத்தனமா பேசிட்டோமோன்னுகூடச் சிந்தித்தாள்.

அவனோ. அவளைப் பார்க்கவில்லை. ஆகாயத்தையே வெறிக்கப் பார்த்துக்கொண்டு நின்றான். தீமைக்கு மட்டும் சூழ்ச்சி சொந்தமல்ல. நன்மைகூட, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, தன்னைத் தீமைகளால் அலங்கரித்துக்கொள்ள விரும்புவதுபோல் அவனுக்குத் தோன்றியது. ஆயிரம் காலத்துப் பயிர் என்று போற்றப்படும் கல்யாணத்தில்கூட, மனித சூழ்ச்சி எவ்வளவு கீழ்த்தரமாகப் போகிறது கோழிக் குஞ்சை நக விரல்களுக்குள் வைத்துக்கொண்டு, மரண வேதனையில் அவதிப்படும் அந்தக் குஞ்சைப்பற்றிக் கவலைப்படாமல் பறக்கும் பருந்து, தன் குஞ்சுக்கு அதை உணவாகக் கொடுக்க வேண்டும் என்கிற தாய்மையில்தான் போகிறது. ஆனால் அந்தத் தாய்மையைக் காட்டிக்கொள்ள அது பேய்மையாகிறது. தாய்மையை பாராட்டுவதா? பேய்மையை நோவதா?

லோகு தன்னை ஒரு கோழிக்குஞ்சாக நினைத்துக் கொண்டான். சிறிது சிந்தனைக்குப்பின் உயரப் பறக்கும் எமப் பருந்தின் காலில்