பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உண்மை உரைத்து...

45



"நானும் நீ அப்டி நினைக்கதா சொல்லல. உன்னக் கல்யாணம் பண்ணிக்கப் போறதாயே சொல்லலியே? என்னமோ தெரியல. பைத்தியம் பிடிச்சவன் மாதிரி உளறுறேன்."

உலகம்மை லேசாகத் துணுக்குற்றாள். அவன் பேசிய தோரணை, ஏனோ அவளை ஒரு வினாடி வாட்டியது.

"அப்படின்னா சரோசாக்கால கட்டிக்க மாட்டியளா?"

"அப்படியும் சொல்ல முடியாது. இப்படியும் சொல்ல முடியாது, இது யோசிக்க வேண்டிய: பிரச்சினை. அந்தப் பொண்ண நினைச்சாப் பரிதாபமாயும் இருக்கு. கோழிக்குஞ்சை பிடிச்சுக்கிட்டுப் போற பருந்து கதை இது. பருந்தோட கொடுமைய நினைச்சி வருத்தப்படுறதா, இல்ல உணவுக்காகக் காத்துக்கிடக்கற பருந்துக் குஞ்சுக்காகப் பருந்தப் பாராட்டுறதா என்கிறத இப்பவே சொல்ல முடியாது. பருந்த விரட்டி குஞ்சைக் காப்பாத்துறதா. பருந்துக் குஞ்சை நினைச்சி அப்படியே நடக்கிறத, நடக்கிறபடி விடுறதா என்கிறத உடனே சொல்ல முடியுமா?"

"ஒண்ணுமட்டும் சொல்லுவேன். எங்க சரோசாக்காகூட ஒரு நிமிஷம் பழகினா போதும். ஒங்களுக்குப் பிடிச்சிடும். அவளுக்கும் ஒங்களுக்கும் கல்யாணம் நடக்கும்போது அவளவிட சந்தோஷப்படுகிறவா ஒருத்தி இருக்க முடியுமுன்னா அது நான்தான், சரி, நான் வாரேன்."

"இளநி?"

"சாப்புட்டா சரோசாக்காவோடதான். வாறேன்."

உலகம்மை, மீண்டும் அவனைவிட்டு விலகி நடந்தாள். அவன், கூப்பிடுவான் என்று எதிர்பார்த்தவள் போலவும், ' அப்படிக் கூப்பிடும்போது, அவன் குரல் கேட்க முடியாத தூரத்திற்குப் போக விரும்பாதவள் போலவும், அடிமேல் அடி வைத்து நடந்தாள். அவன் கூப்பிடவில்லை . அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. திரும்பிப் பார்த்தாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பது போல் தெரிந்ததும், ஏதோ ஒரு சுகம் தெரிந்தது. எதையோ நினைத்துக் கொண்டவள் போல், அவனிடம் ஓடி வந்தாள்.

"ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். நான் இங்க வந்தத யாருக்கிட்டயும் சொல்லிடாதிய. தெரிஞ்சா மாரிமுத்து மாமா என்ன உ.யிரோட எரிச்சிடுவாரு. அதவிட சரோசாக்கா என்ன தப்பா நெனச்சுப்பா. உயிரோட எரியக்கூடத் தயாரு. இது யாருக்கும்