பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு நட்பின் ஆன்மா 1 9

"ஐயம் லாரி... சந்திரன்... நான் ரொம்ப சுயநலவாதியா மாறிட்டேன். பருந்து தன் குஞ்சுகளை குவிப்படுத்தறதுக்காக, கோழிக் குஞ்சுகளைப் பிடிக்கிறது மாதிரி... நான் உன்னை' என்கிட்ட நிலைப்படுத்த... அந்தப் பொண்ணைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்திட்டேன்... ஐ யம் லாரி...

எல்லாம் இவளால்தான். தன் தங்கச்சியை உனக்குக் கொடுத்திடணுமுன்னு ஒத்தக் கால்ல நிக்கிறா..."

"இப்பக் கூடச் சொல்றேன் மோகன், நான் உனக்கு ஒருநாள் டயம் கொடுக்கிறேன். நீ கட்டுன்னு சொன்னால் கட்டிடறேன்."

"டோண்ட் பி ஸில்லி. நீ மட்டும்... ஒன் மாமா பொண்ணு கழுத்துல தாலி கட்டல... இப்பவும் சொல்றேன்... கையைக் காலை உடைச்சிடுவேன்." அவன் மனைவி அதற்கு மேல் நிற்கவில்லை. கைகள் ஒடிந்தது மாதிரி உள்ளே கட்டிலில் போய்ப் படுத்துக் கொண்டாள். அதற்குப் பிறகு, மோகனின் மனைவி போக்கில் பெரிய மாறுதல் ஏற்பட்டது. சாப்பாட்டுத் தட்டை 'டங் என்று வைப்பாள். முனங்கிக் கொண்டே பரிமாறுவாள். கணவன் மீது காரணம் இல்லாமல் எரிந்து விழுவாள். என்னை, அவள் அன்னியமாக நடத்துவது அவனுக்குத் தெரிந்து, அவன் அவளோடு சண்டை போடக்கூடிய கட்டம் வந்து விட்டதை நான் புரிந்துகொண்டேன். இவ்வளவுக்கும் அடிப்படை அன்புதான் என்பதைப் புரிந்துகொண்டதால் என்னால் அவளை வெறுக்கவும் முடியவில்லை. அதே சமயம், முன்னை மாதிரி சகஜமாகப் பழகவும் முடியவில்லை.

தம்பதிக்குள் நான் விரிசலாக இருக்கக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு சென்னைக்கு மாற்றல் வந்தது. அதற்குப் பிறகு மாமன் மகளோடு கல்யாணம். மோகன் மட்டும் வந்திருந்தான். எங்கள் இருவருக்கும் இடையே ஒரு தடுப்பு விழுந்துவிட்டது, இருவருக்கும் புரிந்தது. ஒருவேளை, அவன், அன்பினால் விடுத்த உறவின் அழைப்பை ஏற்க முடியவில்லையே என்பதால் அவனை நேராகப் பார்க்கக் கூசிய என்னை, உதாசீனப்படுத்துவதாக நினைத்துக் கொண்டானோ என்னவோ!

நான்கைந்து ஆண்டுவரை போனதே தெரியவில்லை இரண்டு மூன்று கடிதங்கள் போட்டேன். இயல்பிலேயே சோம்பேறியான அவன், பதிலே போடவில்லை. ஒருவேளை மனைவிக்காரி என் கடிதங்களை அவனிடம் காட்டவில்லையோ என்னவோ!

அதற்குப் பிறகு இப்போதுதான் நான் மோகனைப் பார்க்கிறேன். அவன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். எங்களுக்குள் மெளனம் ஒரு மொழியாயிற்று. புன்னகை, கடந்த காலத்தின் பிரசுரமாயிற்று. இதற்குள், இரண்டு மூன்று தடவை மானேஜர் இண்டர்காமில் பேசிவிட்டார். மோகன் புரிந்து கொண்டான்.