பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ஒரு சத்தியத்தின் அழுகை

"என்னம்மோ... என் போறாத காலம். இப்டி ஆயிட்டேன் நீயாவது மகராசியா இருக்கணும்... மரியாத்தாவ டெய்லி நெனச்சிக்கிறேன். ஒன்கு ஒரு கல்யாணம் ஆயி, வாயில வவுத்துல. ஒரு பூச்சிப்புழுவ பாத்துட்டமுன்னா சந்தோஷமா... கட்டய பூடலாம்." கிழவி எதிர்பார்த்ததுபோல் ஒன்றும் நடக்கவில்லை. செல்லம்மா எரிந்து விழவில்லை. எரிந்து அணைந்துபோன தீபம் போல், கிழவியை சூன்யமாகப் பார்த்தாள். அதுவே, கிழவிக்குப் போதுமான தைரியத்தைக் கொடுத்தது. சற்று உரிமையோடு கேட்டாள்:

"ஆமாம். பிள்ளையாண்டான் இன்னா வேல பாக்குறான்? ஒப்பன மாதிரி பட்ட பூடுவானா? உன்னோட வந்தானே... அவன்தான. மாப்ளபுள்ள? எப்ப கல்யாணம்? எதுக்கும் நல்லாத் தெரியு முன்னால ஒண்ணுக்கிடக்க... ஒண்ணு. பண்ணிக்காதே... ஆணப்புறம். அவனுக்கு விஸ்வாசமா நடந்துக்கணும். புரியதா செல்லம்..."

இப்போதும், கிழவி எதிர்பார்த்தது போல் நடக்கவில்லை. செல்லம்மா நிதானமாக, அழுத்தந் திருத்தமாக, மரணப் பெட்டியில் ஆணி அடிப்பதுபோல், எக்காளமாகவும், இளக்காரமாகவும் பேசினாள். ஒவ்வொரு வார்த்தைக்கும் கெய்வி ஒவ்வொரு விதமாக நைந்துகொண்டே போனாள்.

"நாயினாவ பத்திப் பேச ஒன்கு இன்னாம்மே ரைட்கீது? நான். எப்போ.. பண்ணினா ஒனக்கென்னமே? நானு தாலியமாத்தி. புச்சா தாலி பூட்டாலும் பூடுவேன். ஆனா ஒன்ன மாதுரி நாயினா பூட்ட தாலிய மாத்திக் காமலே புருஷன மாத்திக்கிட்டதுபோல மாத்திக்கமாட்டேன். என்கு போயும் போயும் நீ புத்தி சொல்றீயா? கஸ்மாலம், போம்மே ஒன் வீட்டுக்கு. கல்யான நோட்டிஸ் எடுத்துக்கினு வெத்துல பாக்கோட வாரேன். நீயும் ஒன் கள்ள ஆம்புடையானும் இங்க வந்து ஆசீர்வாதம் பண்ணிட்டுப் போவலாம். துப்புக் கெட்ட துத்தேரி புத்தி சொல்ல வந்துட்டா பெரிய புத்தி."

கிழவியம்மா, முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டாள். பிறகு விரல்களைச் சற்று விலக்கிக் கொண்டே பெத்த மனம் பித்து, பிள்ள மனம் கல்லுன்னு சொல்றது சரிதான் காட்டி" என்று லேசாக முனங்கினாள். இது செல்லம்மாவின் சினத்துக்கு கிருஷ்ணாயிலாகியது."

"ஏம்மே பித்துப் பிடிச்சுப் பேசுற மனசில்லாம பெத்தவ மனம் எப்டிம்மே பித்தா கீதும்? ஏழு வயசுல எல்லா பிள்ளிங்கள மாதுரி, நானும் ஆத்தா மடியில் புரள்ற வயசுல, குயந்தய விட்டுட்டு கள்ள புருஷன் மடில புரள்றதுக்கு பூட்டியே ஒன்கா பித்து மனசு? மெள்ளப்