பக்கம்:ஒரு சத்தியத்தின் அழுகை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு "துரோகியின் விசுவாசம் 77

பேசுமே. யாராவது கேட்டா சிரிப்பாங்க. தான் போட்ட குட்டிய முட்டித் தள்ளிட்டு, இன்னொரு கிடாவோட போவுற ஆட்டுக்கும், ஒனக்கும் இன்னாம்மே வித்தியாசம்? நாய்னா தான் ஒனக்குப் பிடிக்கல. ரத்தபந்தம் இல்லாத மன்ஷன். ஒன் ரத்தத்திலே பொறந்த என்னயே ரத்தத் திமிரில விட்டுட்டுப் பூட்டே. இப்ப ரத்தம் கெட்ட பின்னே வந்தாக்கா என்னாம்மே நாயம்? ஏம்மே பேச மாட்டக்க? பத்தினி மவராசியே பதில் சொல்லு."

கிழவி பதில் சொன்னாள். தட்டுத் தடுமாறி, நாக்கை வாயோடு முட்டி மோதி, வார்த்தைகளை வேதனையோடு பிரசவித்தாள்.

"நான் தட்டுக்கெட்ட கஸ்மாலந்தான், இல்லன்னு சொல்லல. ஒன் நய்னாவும் அதுக்கு ஜவாப்புன்னாலும் நானு செய்தது மாரியாத்தா தாங்க முடியாத கஸ்மால புத்திதான். அவரு அடிச்ச அடியுலயும் குடிச்ச குடியுலயும் புத்தி கெட்டுப்பூட்டேன். ஆனால் அவரு சாவையில நானே செத்தது மாதிரி தோணிச்சு. ஒன்ன நானு எப்பவும் மறக்க முடியல. ஒரு வருவடித்துல ஒன்னோட நய்னா கிட்ட வந்து. மன்னாப்பு கேட்டேன்... சேத்துக்கோன்னு. கெஞ்சு கெஞ்சுன்னு... கெஞ்சினேன்... அது பிச்சுவா. தூக்கிக்கினு. வந்தது. அதுக்குத் தெரியாம... ஒன்ன எத்தனையோ வாட்டி சாடமாடயா பாத்துட்டுப் பூடுவேன்... ஒன்கு... ஒரு. பிள்ள பொறந்தாத்தான் என்னோட மனசு படுற பாடு அப்ப புரியும். என்னாதான் நடந்தாலும். நீ எனக்கி பிள்ளங்கறத மறக்க முடியல..."

"ஏம்மே. தெரியாமத்தான் கேக்குறேன். பதினைஞ்சி வருஷமா... கள்ள ஆம்புடையானோடே குடித்தனம் பண்றியே, ஒரு பிள்ளய... பெக்காம ஏம்மே... போன? அப்படி... பெத்துத் தொலைஞ்சிருந்தா... என்னயும் பாக்கத் தோணாது. இதுனாலே ஒன்கும் பேஜாரு இல்ல. எனக்கும் பேஜாரு இல்ல. ஏதாவது பிள்ள கிள்ள பொறந்துதா... பொறந்து செத்துதா... சொல்லும்மே."

"செல்லம்மா. ஆத்தாள இப்டி பேசாதம்மா... நான் என்ன இருந்தாலும் உன்னோட தாயிடி..."

"தாயின்னு இன்னொருவாட்டி சொன்னியோ.. மவளே அப்பறம் தெரியுஞ் சேதி. நாயிகூட. குட்டிய விட்டுட்டு பூடாது. நீ நீ... என் வாயால சொல்லாண்டாம் ஆனா... ஒண்ணு. தாயப்போல பிள்ள... நூலப்போல சேலன்னு எவனோ ஒரு சோமாறி சொல்லிட்டுப் பூட்டான். நானு தாயி மாதுரி இல்லாத பத்தினின்னு நிரூபிக்கத்தான் போறேன். நீ அபசகுனம் பிடிச்சாப்போல.. இன்னொரு வாட்டி வராத... இத்தோட சரி..."