பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


பிறகு எந்தக் குழு அதிகமாக கரளா கட்டைகளை வீழ்த்திக இருக்கிறதோ அந்தக் குழுவே வெற்றி பெற்றதாகும்.

குறிப்பு: ஒரு குழு ஒரு முறை தாக்கவும், பிறகு தடுக்கவும் என்று மாறிமாறி ஆடவேண்டும். இதற்கென்று 5 வாய்ப்புக்கள் இரு குழுக்களுக்கும் உண்டு. அதனைக் கணக்கிட்டே வெற்றி தோல்வியை நிர்ணயிக்க வேண்டும்.

75. மீட்போம்! சேர்ப்போம்!

(Stealing Sticks)

ஆட்ட அமைப்பு: 74-ம் ஆட்டத்திற்குரிய அமைப்பு

போல்தான்.

எல்லையில் வைத்திருக்கும் கரளா கட்டைகளை காத்துக் கொண்டு இருக்கும் எதிர் ஆட்டக்காரர்களிட மிருந்து எடுத்துக் கொண்டு வந்துவிடுவதுதான் ஆட்டத்தின் நோக்கம் ஆகும்.

ஆடும் முறை: கரளா கட்டைகளை எடுத்துக் கொண்டுவரும் முயற்சியில், எதிர் ஆட்டக்காரரால் தொடப்பட்டுவிட்டால், அவர் கைதி போல, அந்த எல்லையில் போய் நின்று கொள்ள வேண்டும்.

அவரது குழுவைச்சேர்ந்தவர்கள் எல்லைக் கோட்டை (Base Line) அடைந்துவிட்டால், தனது குழு ஆட்டக் காரரையாவது அல்லது கரளாக் கட்டை ஒன்றையாவது (இரண்டில் ஒன்று) கொண்டு வந்துவிடலாம்.

தனது குழு ஆட்டக்காரர் கைதியானால் மீட்போம் அல்லது கரளாகட்டையைக் கொண்டு வந்து சேர்ப்போம் என்பதனால்தான், இந்த ஆட்டத்திற்கு இந்தப் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது.