பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

129


தனக்கடுத்து 10 அடி தூரத்தில் நிற்கும் தன் குழு ஆட்டக்காரரிடம் ஓட அவர் கையுடன் தன் கையை இணைத்துக் கொண்டு, அவருடன் மீண்டும் 10 அடிதுாரம் ஓடி அங்கிருப்பவருடன் கைகளை இணைத்துக் கொண்டு எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து எதிரே உள்ள எல்லைக் கோடு வரை சென்றடைந்து, மீண்டும் திரும்பி ஓடத் தொடங்கும் கோட்டினை வந்தடைய வேண்டும்.

முதலில் வந்து சேர்கிற குழுவே வெற்றி பெற்றதாகும்.

90. எறிந்து உட்காரும் ஆட்டம்

(Pass and Squat Relay)

ஆட்ட அமைப்பு: ஆட்டத்தின் அமைப்பு முன் ஆட்டம் போல்தான். 4 குழுவினரையும் ஓடத் தொடங்கும் கோட்டின் பின்னே நிற்கச் செய்து, ஒவ்வொரு குழுவின் தலைவனையும் அவரவர் குழுவிற்கு எதிரே 5

அடியிலிருந்து 10 அடி தூரத்திற்குள்ளாக ஓரிடத்தில் (குறித்து) நிற்கச் செய்ய வேண்டும். ஒவ்வொருவரிடமும்