பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


யார் ஓடாமலும், அல்லது உட்காராமலும் இருந்து விடுகிறாரோ, அவர் தொடப்படுகிறார்.

அவரே புதிய விரட்டித் தொடுபவராக மாறிவர இவ்வாறு ஆட்டம் தொடர்ந்து நடைபெறும்.

5. தீப்பறவை ஆட்டம் (Ostrich Tag)

இடமும் ஆட்டக்காரர்களும் முன் ஆட்டங்களுக் குரியது போல்தான். ஆடும் முறையும் சற்றேறக்குறைய, முன் ஆட்டங்கள் போலதான். ஆனால், ஒரு சிறு வேறுபாட்டுடன் இதை ஆட வேண்டும்.