பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

21


விரட்டித் தொடுபவர் முதலிலேயே தேர்ந்தெடுக்கப் பட்டுவிடுகிறார். ஆட்டக்காரர்கள் மைதானம் முழுவதும் ஆங்காங்கே நின்று கொண்டிருக்கிறார்கள். விசில் ஒலிக்குப் பிறகு, விரட்டுபவர் விரட்டத் தொடங்குகிறார்.

தப்பித்துக் கொள்ள விரும்புபவர், முன் ஆட்டத்தில் தரையில் உட்கார்ந்து கொண்டார். இந்த ஆட்டத்தில் வேறு முறை பின்பற்றப்படுகிறது.

தப்பித்துக் கொள்ள முயல்பவர் ஒற்றைக் காலால் நின்று, மறுகாலைத் தூக்கி அதனடியில் ஒருகையை விட்டு மேலே கொண்டு வந்து தன் மூக்கைப் பிடித்துக் கொண்டு நின்றுவிட வேண்டும். இப்படி நிற்கின்ற அமைப்பானது தீப்பறவை, நிற்பது போல தோன்றும்.

ஓட முடியாதபோது அவ்வாறு நிற்க இயலாதவர் தொடப்பட்டுவிடுவார். ஆகவே, அவர் அடுத்த விரட்டித் தொடுபவராக மாறிவிட, மீண்டும் ஆட்டம் தொடர்ந்து நடைபெறும்.

6. தட்டி ஓடும் ஆட்டம்

(Slap Jack)

ஆட்ட அமைப்பு: விளையாட வந்திருக்கின்ற குழந்தைகள் அனைவரும், தங்கள் கைகளைக் கோர்த்து முதலில் ஒரு பெரிய வட்டம் அமைக்க வேண்டும். பிறகு, விரட்டித் தொடுபவர் (it) ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆடும் முறை: தனியே நிற்கும் விரட்டித் தொடும் ஆட்டக்காரர், விசில் ஒலிக்குப் பிறகு, வட்டத்தைச் சுற்றி